விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இருநால்வர் ஈரைந்தின் மேல்ஒருவர்,*  எட்டோடு- 
  ஒருநால்வர்*  ஓர்இருவர் அல்லால்,*  திருமாற்கு-
  யாம்ஆர் வணக்கம்ஆர்*  ஏபாவம் நல்நெஞ்சே* 
  நாமா மிகஉடையோம் நாழ்?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வணக்கம் ஆர் - நம்முடைய பணிவுதான் எத்தன்மையது!
ஏ பாவம் - அந்தோ!;
நல் நெஞ்சே - நல்ல மனமே!
நாமா - நாமோ வென்றால்
மிக நாழ் உடையோம் - மிகவும் குற்றமுள்ளவர்களாயிருக்கிறோமிறே.

விளக்க உரை

“எண்மர் பதினொருவ ஈரறுவரோரிவர்” என்று முதல் திருவந்தாதியில் பொய்கையார் அருளிச்செய்த முப்பத்துமூன்று தேவர்களையே இவரும் சப்தபேதத்தாலே அருளிச் செய்கிறார். அவர் அஷ்டவஸுக்களை எண்மர் என்றார்; இவர் இருநால்வர் என்கிறார்; அவர் ஏகாதச ருத்ரர்களைப் பதினொருவர் என்றார்; இவர் ஈரைந்தின்மேலொருவர் என்கிறார்; அவர் த்வாதசாதித்யர்களை ஈரறுவர் என்றார்; இவர் எட்டோடொரு நால்வர் என்கிறார்; அச்விநீதேவர்களை ஓரிருவர் என்றது மாத்திரம் இருவர்க்குமொத்தது. ஆக முப்பத்துமூன்று தேவர்களைச் சொன்னது ஸமஸ்த தேவர்களையும் சொன்னபடியாமென்பர்; ஆண்டாளும் “முப்பத்து மூவரமரர்க்கு முன் சென்று” என்றருளிறே. வேதமும் ***-=த்ரயஸ்த்ரிம்சத்வைதேவா” என்று பலவிடங்களிலும் ஓதாநின்றது. முப்பத்து மூலரமரர்கள் தாம் எம்பெருமானுக்கு உரியவர்கள்; நாம் ஆர், நம்முடைய வணக்கமென்பது யாது? என்று ஸநச்யர்னுஸந்தான்யமாகவோ வெறுப்பாகவோ அருளிச் செய்தாராயிற்று. யாம் ஆர் = பிறப்பு ஒழுக்கம் முதலியவற்றால் அயோக்யரான நாம் அவனுக்கு எந்த வகுப்பில் சேர்ந்தவர்கள்? ரக்ஷ்யவர்க்கங்களுள் ஒரு வகுப்பிலும் சேர்ந்தவர்களெல்லாம் என்றபடி. வணக்கம் ஆர் = அயோக்யரான நம்முடைய ஆச்ரயணந்தான் அவனுக்கு எங்ஙனே? நாம் ஆச்ரயித்தோமென்பது அவனக்கொரு பொருளோ? “பிறையேறு சடையானும் நான் முகனுமிந்திரனும், இறையாக விருந்தேத்த வீற்றிருத்தலிது வியப்பே” (திருவாய்மொழி 3-1-10.) என்னும்படியாயுள்ள அவனுக்கு, அறிவொன்றுமில்லாத நம்முடைய வணக்கம் ஒரு வஸ்துவாகவும் இட்டெண்ணத்தக்கதோ வென்றபடி. “வணக்கம் எது” என்னாமல் “வணக்கம் ஆர்” என்று அஃறிணைச் சொல்லுக்கு உயர்திணை வினாச்சொல் இட்டுச் சொன்னது ஒரு வகைக் கவிமரபு. ஏபாவம் = வடமொழியில் *** (அஹஹ)* (ஹந்த) ** (பத) என்னும் அவ்வயயங்கள் போலே தமிழில் இது ஒரு இரக்கக் குறிப்பிடைச் சொல்போலும் ‘இருநிலத்தோர் பழிபடைத்தேன் ஏபாவமே” என்ற திருநெடுந்தாண்டகமுங்காண்க. திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம்! = புருஷோத்தமனாகிய அவன் முன்னே நாம் ஒரு பதார்த்தமாக நிற்பதும், அவனை நாம் வணங்கினோமென்பதும் எவ்வளவு ஹேயமான விஷயம்!- என்று தம்மில் தாம் கர்ஹித்துக்கொள்ளுகிறபடி. ஏன் இப்படி சொல்லுகிறீர்? என்ன; நாமா மிகவுடையோம் நாழ் என்கிறார். நாமா என்றது- நாமோ வென்றால் என்றபடி. நாம் அளவற்ற குற்றமுடையவர்களன்றோ; ஆனது பற்றி “நாமார் வணக்கமார்” என்றோம் என்கை. இப்பாட்டில் அயோக்யதாநுஸந்தாநம் பண்ணுகிறாராகக் கொள்ளும் பக்ஷத்தில் “நாமாமிகவுடையோம் நாழ்” என்றது. அபராதஸஹஸ்ர பாஜநம்” என்றுமாபோலே ஸ்வரூபமாகச் சொல்லிக்கொண்டதாம். அங்ஙனன்றி, ப்ரயோஜநாந்தரபரர்கட்கு அவர் காரியம் செய்வரேயன்றி அநந்ய ப்ரயோஜநரான நமக்குக் காரியம் செய்வரோ? என்று வெறுப்பாகச் சொல்லுகிறரென்று கொள்ளும் பக்ஷத்தில், இங்கு நாமா மிகவுடையோம் நாழ் என்றது- ப்ரயோஜநாந்தர பரர்களுக்கே காரியஞ் செய்கிறவரான அவருடைய திருவுள்ளத்தாலே குற்றமாகத் தீர்மானிக்கப்பட்ட அநந்யப்ரயோஜநத்வத்தை நாம் உடையோமென்றோ? என்றவாறு. நாழ்- குற்றம்.

English Translation

The eight vasus, the eleven Rudras, the twelve Adityas, the twin Asvis, -being none of these, who are we to the Lord? What is our worship to him? Alas, O Heart! We have only a boastful tongue.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்