விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  யாமே அருவினையோம் சேயோம்,'*  என் நெஞ்சினார்- 
  தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,*  -பூமேய-
  செம்மாதை*  நின் மார்வில் சேர்வித்துப்,*  பார்இடந்த- 
  அம்மா! நின் பாதத்து அருகு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என் நெஞ்சினார் தாமே - என்னுடைய நெஞ்சதானே
அணுக்கர் ஆய் சார்ந்தொழிந்தார் - அந்தரங்கமாகச் சென்று சேர்ந்துவிட்டது;
அரு வினையோம் - போக்க முடியாத பாவத்தைப் பண்ணியுள்ள
யாமே - நாங்கள் மாத்திரம்
சேயோம். - தூரத்திலிருக்கிறோம்.

விளக்க உரை

“கருமா முறிமேனி காட்டுதியோ?” என்றாரே கீழ்ப்பாட்டில். ஆழ்வீர்! இதோ என்னுடைய கருமாமுறிமேனியைப் பாரும்’ என்று எம்பெருமான் சொல்லப்போகிறானென்றும் திருமேனி ஸேவை கிடைக்கப்போகிறதென்றும் ஆவல்கொண்டிருந்தார்; நெஞ்சுக்கு மாத்திரம் ஸேவை ஸாதித்தபடியேயொழிய, கட்கண்ணால் காணும்படியாகலாம் கைகளாலே அணைத்துக் களிக்கும்படியாகவும் ஸேவை ஸாதிக்கப் பெறவில்லை. அப்படிப் பெறாததனாலே தமக்குண்டான கஷ்டத்தைக் கூறுகின்றாரிதில். “பூமேய செம்மாதை நின்மார்வில் சேர்வித்துப் பாரிடந்த அம்மா!, என் நெஞ்சினார்தாமே அணுக்கராய் நின்பாதத்தருகு சார்ந்தொழிந்தார்; அருவினையோம் யாமே சேயோம்” என்று அந்வயம். முதலிலேயே நான் எனது நெஞ்சைக்கூவி “முயற்சி சுமந்தெழுந்து முந்துற்று நெஞ்சே! இயற்றுவாய் எம்மொடு நீ கூடி” என்று என்னோடு சேர்ந்து நீ காரியத்தை நடத்து என்று சொல்லி வைத்திருந்தும் என் சொல்லை லக்ஷியம் பண்ணாத அந்த நெஞ்சானது என்னை நெடுந்தூரத்திலே தனிப்பட விட்டுவிட்டுத் தான் மாத்திரம் எம்பெருமானுடைய திருவடிகளுக்கு அந்தரங்கமாக அணுகி அங்கேயே லயித்துவிட்டது; அது நல்ல பேறு பெற்றுவிட்டது; நான்தான் இப்படி தூரஸ்தனாய் வருந்திக் கிடக்கிறேன்; நான் பண்ணின பாவமிது! என்கிறார். ஆழ்வார் நம்மைப்போலே இவ்விருள் தருமா ஞாலத்திலே ஸம்ஸாரிகளுடைய மத்தியில் இருந்தாலும் அவருடைய திருவுள்ளம் மாத்திரம் பகவத் மாதாரவிந்தத்திலேயே அழுந்தியிருக்குமென்பது இதனால் அறியத்தக்கது. சேயோம் = சேய்மை என்னும் பண்படியாப் பிறந்த தன்மைப்பன்மை வினைமுற்று = சேய்மையாவது தூரம்; தூரத்திலுள்ளவன் சேயோன்; சோயோம் என்றது- தூரத்திலிருக்கிறோம் என்றபடி “என்னெஞ்சு சார்ந்தொழிந்தது” என்ன வேண்டியிருக்க, நெஞ்சினார் என்றும் சார்ந்தொழிந்தார் என்றும் உயர்திணையாகக் கூறியது- எம்பெருமானிடத்துத் தமக்குள்ள கௌரவத்தினால் அவனிடத்து ஆழங்காற்பட்ட மனத்தை உயர்த்திக் கூறவேணுமென்ற கருத்தினாலாம். அணுக்கர்- அந்தரங்களர். ஸமீபத்திலுள்ளவர்.

English Translation

O Lord with line lady of the lotus adoring your chest! O Lord who measured the Earth! My heart has already attained your feet. Alas, we sinners alone are still for away.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்