விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  என்னின் மிகுபுகழார் யாவரே,*  பின்னையும்மற்று- 
  எண்இல்*  மிகுபுகழேன் யான்அல்லால்,*  -என்ன-
  கருஞ்சோதிக்*  கண்ணன் கடல்புரையும்,*  சீலப்- 
  பெருஞ்சோதிக்கு என்நெஞ்சு ஆட்பெற்று

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என் நெஞ்சு ஆள் பெற்று - என்னுடைய நெஞ்சானது அடிமைப்பட்டதனால்
என்னில் - என்னைவிட
மிகு புகழார் யாவரே - மிக்க புகழுடையவர் யார் கொல்?
மற்று பிள்ளையம் எண்ணில் - இன்னமும் ஆராய்ந்து பார்க்குமளவில்
மிரு புகழோன் யான் அல்லால் - மிக்க புகழுடையவன் தவிர வேறு யாருமில்லை.

விளக்க உரை

முதற்பாட்டில், ஆழ்வார் எம்பெருமானைப் புகழத் தொடங்கி, இரண்டாம் பாட்டில், அவனை நாமோ புகழ்வதென்று பின்வாங்கி, மூன்றாம் பாட்டில்- புகழாதிருக்க முடியாமையைச் சொல்லி முடித்தார். அவனைப் புகழ்வது நமக்குத் தகாதென்று நாம் அயோக்யதையால் பின்வாங்க நினைத்தாலுங்கூட ஏதேனுமொருபடியாலே அவனது புகழ்களைப் பற்றி நம் வாயால் சில பாசுரங்கள் பேசியே தீர வேண்டியதாகிறதே! ஹா ஹா! நம்முடைய பாக்கியமே பாக்கியம்;நம்மைவிட பாக்கியசாலிகள் வேறு யாமுளர்? எம்பெருமானுடைய சில திருக்குணங்கள் நம் வாயிலும் புகுந்து புறப்படும்படியான நல்லகாலம் வாய்த்ததே! என்று மகிழ்கிறார் இதில். “என்னில் மிகுபுகழார் யாவரே” என்பதில் சொல்லுகிற அர்த்தமே “பின்னையும் மற்றெண்ணில் மிகுபுகழேன்யானல்லால்” என்பதிலும் கிடந்தாலும் ஸந்தோஷாதிசயத்திலே இரட்டித்துச் சொல்லுகிறபடி “இல்லையெனக்கெதி ரில்லைனெக்கெதி ரில்லையெனக்கெதிரே” என்பதுபோல. இவ்விடத்தில் இவர் நினைக்கிற புகழாவது- பாக்யசாலி என்கிற கீர்த்தியாம். ஆகவே. என்னைவிட பாக்யசாலி வேறு யார்? என்றதாயிற்று. ‘உமக்கிப்போது என்ன பாக்கியம் வந்துவிட்டது?’ என்ன, பின்னடிகளில் அந்தப் பாக்கியத்தை விவரிக்கிறார்;- என்ன கருஞ்சோதிக்கண்ணன் கடல்புரையுஞ் சீலப் பெருஞ்சோதிக்கு என்னெஞ்சு ஆளாகப் பெற்றதனால் “என்னில் மிகுபுகழார் யாவரே?” என்ன வேண்டியதாயிற்று என்கிறார். என்ன என்றது- என்னுடைய என்றபடி தன்னுடைய வடிவை எனக்கு அநுபவிக்கக் கொடுத்தருளின கண்ணபிரான் என்கை. கடல்புரையும் சீலன் என்றது கடல்போன்ற கம்பீரஸ்வபாவமுடையனென்றபடி. சீலம் என்ற வடசொல் - ஸ்வபாவமென்றும் நல்லொழுக்கமென்றும் பொருள்படும். “சீலப்பெருஞ் சோதிக்கு” என்றவிடத்து சீலன் என்று பிரியும்; “சில விகாரமாமுயர்திணை” என்பது நன்னூல். ஆள் பெற்று என்றது - ஆளாகப் பெற்றது காரணமாக என்றபடி. எம் பெருமானை நெஞ்சால் நினைத்தாலும் கெடுதியாமென்ற கொண்டிருந்த கொள்கை நீங்கி அப்பெருமான் விஷயத்திலேயே இன்று என்னெஞ்சு ஆழ்ந்து அவகாஹிக்கப்பெற்றதனால் நான் மஹாபாக்ய சாலியானேன் என்றாயிற்று.

English Translation

My heart is wedded to the Lord, my dark radiant Krishna, of ocean-like glory-flood effulgence. Who in the world is more celebrated than we? Come to think, can there be such a one other than me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்