விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இவைஅன்றே நல்ல*  இவைஅன்றே தீய,* 
  இவை என்றுஇவை அறிவனேலும்,* -இவைஎல்லாம்
  என்னால் அடைப்பு நீக்கு*  ஒண்ணாது இறையவனே,* 
  என்னால் செயற் பாலது என்?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என்னால் - என்னாலே
அடைப்பு நீக்கு ஒண்ணாது - பற்றவும் முடியாது, விடவும் முடியாது;
என்னால் செயற்பாவது என் - (சபலனான) என்னாலே செய்யக்கூடியது என்ன இருக்கிறது?
இறையவனே - எம்பெருமானே!
இவை அன்றே நல்ல - உன்னைப் புகழாமையும் சிந்தியாமையுமாகிற இவையன்றோ நல்லது;

விளக்க உரை

உரை:1

“சீறல் நீ” என்று திருவுள்ளத்தில் இரக்கமுண்டாம்படி பிரார்த்திக்க ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்-, “ஆழ்வீர்! என்னுடைய சீற்றம் கிடக்கட்டும்; நீர் என்ன தீர்மானம் செய்து கொண்டீர்? ‘புகழ்வது தகுதிதான்’ என்று கொண்டீரா? அல்லது புகழத்தகாது என்றே கொண்டீரா? அதை நிஷ்கர்க்ஷித்துச் சொன்னீராகில்; பிறகு பார்ப்போம்” என்றான்; அதற்கு உத்தரமாயிருக்கிறது இப்பாட்டு. இதில் சொல்லுகிறது யாதெனில்; எம்பெருமானே! இது யுத்தம், இது ஆயுக்தம் என்கிற விஷயம் அடியேனுக்குத் தெரியாமையில்லை; அற்ப ஞானிகள் உன்னைப் புகழ்வது அயுக்தம். புகழாதிருப்பது யுத்தம்- என்பதை அடியேன் நன்று அறிவேன். அதில் ஸம்சயமில்லை; ஆனால், அறிந்தபடியே அநுஷ்டிக்க என்னாலாகாது. நான் அறிந்திருக்கிறபடியே அநுஷ்டிக்க வேணுமானால், உன்னைப் புகழ்வதை விட்டுப் புகழாமையைப் பற்றவேணுமிறே இந்த வீடுபற்றுக்கள் என்னால் செய்யப்போகாது. (உன்னைப் புகழாதிருக்க என்னால் முடியாது என்றபடி.) * என்னால் செயற்பாலது என்? = என்னுடைய இஷ்டப்படி காரியம் நிறைவேறுமாகில் உன்னைப் புகழாமலிருந்துவிடுவேன்; அதில் தடையில்லை; *“என் நா முதல் வந்து புகுந்து நல்லீன்கவி, தூமுதல் பத்தர்க்குத்தான் தன்னைச்சொன்ன என்வாய் முதலப்பன்” (திருவாய்மொழி 7-9-3) என்றபடி என்னுடைய வாக்குக்களுக்கு ப்ரவர்த்தகன் நீ யாகையாலே, அது புகழ்வதோ இகழ்வதோ உன் காரியமேயொழிய என்னுடைய காரியமாக யாதொன்றுமில்லைகாண் என்றவாறு. இனி, “என்னால் செயற்பாலதென்” என்பதற்கு - எனது அன்பு செய்கிறதேயொழிய நான் செய்வதொன்றுமில்லை என்பதாகவும் உரைக்கலாம். நல்ல, தீய- பலவின்பால் குறிப்பு விலைமுற்று. அடைப்பு நீங்கொண்ணாது = அடைப்பாவது பரிந்தரஹித்தல்; நீங்காவது பரித்யஜித்தல்... பரிக்ரஹிந்தக்கதான புகழாமையைப் பரிக்ரஹிக்கவும், பரித்யஜிக்கத் தக்கதான புகழ்வதைப் பரித்யஜிக்கவும் என்னாலாகாது என்றபடி, ஏன் உம்மாலாகாது? என்னில்; அதற்கு மைதானம் என்னால் செயற்பாலதென்? என்பதாம்.

உரை:2

இறைவனே, இவையெல்லாம் நல்லது, இவையெல்லாம் கெட்டது என்று நான் அறிந்திருந்தாலும் என்னால் அவைகளைக் கட்டுப்படுத்த முடியாது (அடைப்பு நீக்கொணாது). என்னால் செய்யக்கூடியது என்ன, எல்லாம் நீதானே?

English Translation

O Lord! I do not know what is good, what is bad, what is what, and what is what not. And even if do, I cannot take out or retain anything on my own. What is there that I can do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்