விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாமுதல் அடிப் போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி,* 
    மண் முழுதும் அகப்படுத்து,*  ஒண் சுடர் அடிப் போது-
    ஒன்று விண் செலீஇ,*  நான்முகப் புத்தேள் 
    நாடு வியந்து உவப்ப,*  வானவர் முறைமுறை-
    வழிபட நெறீஇ,*  தாமரைக் காடு-
    மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதும் ஆய்*
    இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன* 
    கற்பகக் காவு பற்பல அன்ன* 
    முடி தோள் ஆயிரம் தழைத்த* 
    நெடியோய்க்கு அல்லது அடியதோ உலகே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மா முதல் அடி போது ஒன்று - (உலகத்துக்கெல்லாம்) மூலாதாரமாகிய திருவடிகளில் ஒன்றை
கவிழ்ந்து அலர்த்தி - நிலமட்டமாகப்பரப்பி
மண் முழுவதும் - பூமியை யெல்லாம்
அகப்படுத்து - திருவடிக்குள்ளடக்கி ஸ்வாதீனப்படத்திக்கொண்டும்
ஒண் சுடர் அடி போது ஒன்று - அழகிய தேஜ்ஸ்ஸு நிறைந்த மற்றொரு திருவடித்தாமரையை
நான் முகன் புத்தேள் நாடு - பிரமதேவனுடைய உலகமானது

விளக்க உரை

(மாமுதல்) எம்பெருமான் உலகமளந்த சரிதையை அநுஸந்தித்து, ‘இப்படியும் ஒரு ஸெளலப்யமும் ளௌசீல்யமும் உண்டாவதே!‘ என்றீடுபட்டு ஆச்ரிதர்க்காகத் தன்னை அழிய மகறக்காரியஞசெய்கிற மஹோபகாரகனாகிய பரமபுருஷனுக்கன்றி வேறுயாருக்கு இவ்வுலகம் அடிமைப்படமுடியும்? எல்லார் தலையிலும் திருவடிகளைப் பரப்பின தெய்வத்தை நோக்கி “அன்றிவ்வுலகமளந்தாய் அடிபோற்று“ என்று மங்களாசாஸநம் பண்ணுகை ஏற்குமேயன்றி அவன் திருவடிகளின்கீழ் துகையுண்ட சிலரை நோக்கி ‘ஜய விஜயீபவ‘ என்னக் கூடுமோ வென்கிறார். மாமுதல் – என்பதைத் திருவடிக்கு விசேஷணமாக்கி உரைப்பதன்றி அண்மைவிளியாகக் கொண்டு உலகங்கட்கெல்லாம் ஆதிகாரணனான எம்பெருமானே! என்று ஸம்போதநமாக உரைத்தலும் ஒக்கும். போது –புஷ்பம், அதாவது தாமரைப்பூ அடிப்போது பாதாரவிந்தம். இதைக் கவிழ்த்துப் பரப்பிப் பூமண்டலம் முழுவதையும் ஸ்வாதீனப்படுத்திக்கொண்டானாயிற்று. செலீஇ- செலுத்தி சொல்லிசையளபெடை. “வானவர் முறை வழிபடநெறீஇ“ என்றே பெரும்பாலும் ஓதுகின்றனர். நிறீஇ என்ற பாடமும், நிறுத்தி என்று அதற்குப்பொருளும் அஸ்மதாசார்யர் அருளிச் செய்த்து. நெறீஇ என்ற பாடமும் பொருந்தும், வியாக்கியானத்திற்கும் இணங்கும். வானவர் – தேவர்கள், நெறீஇ – நல்வழிப்பட்டு, முறை முறை – சாஸ்த்ர விதிப்படி, வழிபட – ஆராதிக்கும்படியாக என்று பொருளாகக் கடவது. நெறீஇ – இறந்தகால வினையெச்சம். நெறி – பகுதி, இ-இறந்த கால வினையெச்ச விகுதி, இகரம் ஈகாரமானதும் அளபெடுதத்தும் விகாரம். நான்முகப் புத்தேள் –புத்தேள் என்று தெய்வத்திற்குப் பெயர் நான் முகன் – புத்தேள், நான்முகப்புத்தேள் பிரமதேவன் என்றபடி. அவனுடைய நாடு வியந்து உவப்ப என்றது – அவனுடைய நாட்டிலே உள்வர்கள் ‘தாமரை போல் பரம போக்யமான ஒரு திருவடி இங்கே வந்து ஸேவை ஸாதிப்பதே!‘ என்று ஆச்சரியமும் ஸந்தோஷமும் அடைய என்றபடி.

English Translation

O Ancient Lord! You rose into the sky wearing a Crown that shone with the light of a thousand Suns, sporting a thousand arms like a forest of dense kalipa trees, a face exuding charm, with coral lips and eyes resembling a dense thicket of lotuses. With one lotus-foot firmly on the Earth, with another foot straddling the worlds. You entered the world of Brahma where gods and celestials were filled with joy and wonder. Gods come in hordes and offered worship. Can the world becomes devotees of another god?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்