விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  செக்கர் மா முகில் உடுத்து மிக்க செஞ்சுடர்ப்- 
  பரிதிசூடி,* அம் சுடர் மதியம் பூண்டு* 
  பல சுடர் புனைந்த பவளச் செவ்வாய்* 
  திகழ் பசுஞ் சோதி மரகதக் குன்றம்* 
  கடலோன் கைம்மிசைக் கண்வளர்வது போல்* 
  பீதக ஆடை முடி பூண் முதலா 
  மேதகு பல் கலன் அணிந்து,*  சோதி- 
  வாயவும் கண்ணவும் சிவப்ப,*  மீதிட்டுப்- 
  பச்சை மேனி மிகப் பகைப்ப*
  நச்சு வினைக் கவர்தலை அரவின் அமளி ஏறி* 
  எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து*
  சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்* 
  தெய்வக் குழாங்கள் கைதொழ கிடந்த* 
  தாமரை உந்தித் தனிப் பெரு நாயக* 
  மூவுலகு அளந்த சேவடியோயே! (2)  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பவளம் செம் வாய் - பவழங்களாலே சிவந்த இடங்களையுடையதும்
திகழ் பசும் சோதி - விளங்குகின்ற பசுமையான நிறத்தையுடையதுமான
மரகதம் குன்றம் - ஒரு பச்சை மாமலையானது,
செக்கர் மா முகில் உடுத்த  - சிவந்த பெரிய மேகத்தை அரையில் உடுத்துக் கொண்டும்
மிக்க செம் சுடர் பரிதி சூடி - மிகவும் சிவந்த தேஜஸ்ஸையுடைய ஸூர்யனை சிரஸ்ஸில் அணிந்து கொண்டும்

விளக்க உரை

உரை:1

[செக்கர்மாமுகில்.] ஆழ்வார், கீழ்ப்பிரபந்தமாகிய திருவிருத்தத்தின் முதற்பாட்டில் “அழுக்குடம்பும்” என்று தம்முடைய சரீரத்தின் தண்மையைப் பேசினார்; இந்த முதற்பாட்டில் எம்பெருமானுடைய திருமேனியின் வைலக்ஷண்யத்தி லீடுபட்டுப் பேசுகிறார். அப்ராக்ருதமாய் ஒப்புயர்வற்றதான பகவத் திவ்யமங்கள விக்ரஹத்திற்கு ப்ராக்ருத வஸ்துக்களிலே ஒன்றை உபமானமாக எடுத்துக்கூறுவதானது ஒட்டுரைத் திவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும், பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ என்றபடி அவத்யமேயாயினும், ஓர் உபமானத்தையிட்டே அநுபவித்துத்தீர வேண்டியிருப்பதாலும், வேதாந்தங்களிலும் அப்படியே உபமானங்களையிட்டே நிரூபித்திருப்பதாலும் இவ்வாழ்வார்தாமும் இங்கு ஓர் உபமானத்தை யிட்டுப்பேசி அநுபவிக்கிறார். ‘ப்ரஸித்தோபமை’ என்றும் ‘அபூதோபமை’ என்றும் உவமை இரண்டு வகைப்படும்; முகம் சந்திரனைப் போன்றது-திருவடி தாமரையைப் போன்றது-என்றிங்ஙனே பேசுதல் ப்ரஸித்தோபமையாம்; இனி அபூதோபமையாவது-தமிழில் இல்பொருளுவமை எனப்படும். ப்ரஸித்தமல்லாத ஒரு விஷயத்தைக் கவிகள் தம் புத்திசமத்காரத்தாலே ஏற்படுத்திக்கொண்டு அதனை த்ருஷ்டாந்தமாக்கிக் கூறுதல் அபூதோபமையாம். இப்படிப்பட்ட அபூதோபமையைக் கூறுவதன் கருத்து- உபமேயப் பொருளானது ஒப்பற்றது என்பதைத் தெரிவிப்பதேயாம்.

உரை:2

பவழங்களாலே சிவந்த இடங்களையுடையதும் பசுமையான நிறத்தையுடையதுமான ஒரு பச்சை மாமலையானது சிவந்த மேகத்தை அரையில் உடுத்தி, சூரியனையும் சந்திரனையும் , நக்ஷத்திரங்களையும் அணிந்து கடலரசனுடைய கைமேலே பீதாம்பரம், திருவபிஷேகம் கண்டிகை முதலான பல திருவாபரணங்களைச் சாத்திக்கொண்டு படுத்துக்கொண்டிருப்பதுபோல அழகிய வாயும் கண்களும் சிவந்திருக்கப்பெற்று பசுமையான திவ்யமங்கள விக்ரஹத்தின் நிறமானது மற்ற ஒளிகளெல்லாவற்றிற் காட்டிலும் மேலோங்கி விளங்கப்பெற்று அலையெறிகின்ற கடலினிடையே விஷத் தொழிலையும் கப்புவிட்டுக் கிளர்கின்ற(பல) தலைகளையுமுடைய திருவனந்தாழ்வானாகிற சயனத்தின் மீது ஏறி யோகநித்திரையில் அமர்ந்து சிவன் பிரமன் இந்திரன் முதலிய எல்லாத் தேவகள் சேவிக்கும்படியாக பள்ளிகொண்டிருக்கிற தாமரைப் பூவைத் திருநாபியிலே உடைய சர்வேஸ்வரனே மூன்று லோகங்களையும் அளந்த அழகியதிருவடிகளை யுடையவனே!

English Translation

O Lord with lotus-red feet that strode the Earth! Wearing the red clouds as vestments, the radiant Sun as a diadem, the pleasing Moon on your person, and stars spangled all over, with red coral lips, and green radiance-spreading emerald mountains, you lie in the arms of the sealord, seemingly like one asleep; wearing a yellow vestment, a crown, and many golden jewels, the red of your eyes and lips glowing, the green of your eyes and lips glowing, the green of your body overpowering the red, in the middle of the Ocean of Milk, on a serpent with many hoods, you recline in deep sleep where all the gods led by Siva, Brahma, and indra stand and offer worship. O Lord without a peer or superior, with a lotus on your navel!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்