விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சுருங்கு உறி வெண்ணெய்*  தொடு உண்ட கள்வனை,*  வையம் முற்றும்
  ஒருங்குற உண்ட*  பெரு வயிற்றாளனை,*  மாவலிமாட்டு-
  இருங் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டிச் சென்ற*
  பெருங் கிறியானை அல்லால்,*  அடியேன் நெஞ்சம் பேணலதே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சுருக்கு உறி வெண்ணெய் - சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெய்யை
தொடு உண்ட - வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை - கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும் - உலக முழுவதையும்
இரு குறள் ஆகி - மிக்க வாமனவடிவ முடையனாகி

விளக்க உரை

தோழிக்குத் தலைவி தன் கற்பு உணர்ச்சி அறத்தோடு நிற்றல் இது பாரங்குச நாயகியாகிய தலைமகள் களவொழுக்கத்தால் ஸர்வேச்வரனாகிய தலைமகனைக் கூடி நிற்க, அந்நிலையை யறியாத பெற்றோர் அவளைப் பிறர்க்கு விவாஹஞ் செய்விக்க முயற்சி கொள்ள, அதனை யறிந்த நாயகி தனது களவைத் தோழிமூலமாக செவிலிக்கும் அவள் மூலமாகத் தந்தைக்கும் மற்றும் பெரியோர்க்குந் தெரிவித்துத் தன்னை அத்திருமாலுக்கே விவாஹஞ் செய்து வைக்கும்படி செய்துகொள்ள விரும்பி அத்தலைமகள் தன் கருத்தை தோழிக்கு வெளிப்படுத்தியது இது’. இங்ஙனம் களவை வெளிப்படுத்தல் ‘அறத்தொடு நிற்றல்’ எனப்படும். ‘சுருங்குறி வெண்ணெய் தொடுவுண்ட கள்வன்’ என்பதனால் ஸௌலப்ப குணமும் ‘வையம் முற்றும் ஒருங்குறவுண்ட பெருவயிற்றாளன்’ என்றதனால் பர்வகுணமும், மாவலி மாட்டிருங்குறளாகி யிசையவோர் மூவடி வேண்டிச்சென்று பெருஙகிறியான்’ என்றதனால் பரத்வ ஸௌலப்யங்களிரண்டுங் கூடின கூட்டாவும் குறிப்பிடப்பட்டன.

English Translation

The Lord who came and stole butter from the rope-shelf, who swallowed the whole universe in one gulp, and who went to Mabali as on adorable manikin and tricked him, alone is my heart's desire. I shall not serve anyone else.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்