விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தலைப்பெய்து யான் உன்*  திருவடி சூடும் தகைமையினால் ,*
  நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இம் மாயமும்,*  மாயம் செவ்வே-
  நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்தோறு அசுரர் குழாம்*
  தொலைப் பெய்த நேமி எந்தாய்,*  தொல்லை ஊழி சுருங்கலதே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அசுரர் குழாம் - அசுரர் கூட்டத்துக்கு
தொலைபெய்த - அழிவைப் பண்ணின
நேமி - சக்கராயுதத்தை யுடைய
எந்தாய் - எம்பெருமானே!
யான் - நான்

விளக்க உரை

-நாயகனைப் பிரிந்த நாயகி பிரிவுக்கு ஆற்றாது உரைக்கும் பாசுரம் இது. நான் உன்னை யணுகி உனது திருவடிகளைத் தலைமேற்கொண்டு வழிபடும்படியான இவ்வுடம்பைப் பெறுதற்கு நல்ல தவஞ் செய்து வைத்திருந்தும் அப்பேறு முட்ட மூடியக்கை கூடாமல் இடையில் நீங்குதலை ஆலோசிக்குமிடத்து ஆற்றாமையாற் காலம் மிக நெடுகித் தோன்றுகிறது என்பது இப்பாட்டின் தேர்ந்த கருத்து. ‘சுருங்கலது’ என்பதற்கு சுருங்குகிறதில்லை என்று எதிர்மறையாகப் பொருள் கொள்வதன்றியே ‘சுருங்குதலையுடையது’ என உடன்பாடாகப் பொருள் கொள்வதாயின், இப்படியே என் காலங் கழிந்து விடுகிறதேயென்று இரங்கியபடியாம். பூர்வஜந்மங்களில் மிக்க பெருந்தவஞ் செய்திருந்தாலன்றி, இப்படிப்பட்ட அரிய பெரிய நாயகனைப் பெறுதல் இயலாதாதலால் ‘நோற்ற இம்மாயம்’ என்றது “உள் திருவடிகளில் அடிமையாலல்லது செல்லாதபடியான சரீரத்தைப் பெற்றபடியையும், அப்படியிருக்கச செய்தே அவ்வடிமையை இழந்திருக்கிற இருப்பையும் அநுஸாந்திக்கக் காலம் போருகிறதில்லையென்கிறார்’ என்பது அப்பிள்ளையுரை. ஸர்வேச்வரனைச் சரணமடைந்து அவன் திருவடிகளையே வணங்கி அத்திருவடிகளே பேற்றுக்கு உபாயமென்று அத்யவஸாயங் கொள்வதற் குறுப்பான இவ்விலக்ஷண சரீரத்தைப் பெற்றிருப்பதையும் அப்படி பெற்றிருந்தும் பூர்ணாநுபவம் கிடைத்திடாமலிருப்பதையும் நோக்குமிடத்துக் காலதாமதம் பொறுக்க முடியவில்லை யென்று ஆழ்வார் கலங்கியுரைத்தாயிற்று.

English Translation

O Lord bearing a discus that wipes out Asuras! By the grace of worshipping your feet with my head, my heart is set in you. Considering by the wonder of my receiving such as conductive body and the wonder of my receiving the fruits of my bodily endeavours, the long aeons of waiting gone by seem trivial.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்