விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  திருமால் உரு ஒக்கும் மேரு,*  அம் மேருவில் செஞ்சுடரோன்*
  திருமால் திருக்கைத் திருச் சக்கரம் ஒக்கும்,*  அன்ன கண்டும்- 
  திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்*
  திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,*  எங்கே வரும் தீவினையே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திருமால் உருவோடு அவன் சின்னமே - அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையும் (நேரிற் கண்டாற்போல அன்பு மிகுதியாற் பரவமடைந்து.) பேரிட்டுக் கூவும்படியான.
ஓர் திருமால் - ஒப்பற்ற செல்வமாக வேட்கை
தலைக் கொண்ட நங்கட்கு - ஏற்றுக் கொண்டுள்ள எமக்கு
தீ வினை - (பிரிவுக்குக் காரணமான) பாவம்
எங்கே வரும் - எப்படி வரக்கடவது? (வரமாட்டாது.)

விளக்க உரை

போலிகண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்கி யுரைக்கும் பாசுரம். எம் பெருமானை நேராக ஸேவிக்கப் பெறுமளவில் மாத்திரமேயல்லாமல் அவனது போலியைக் காணுமளவில் அவனாகவே பாவித்து இடைவிடாது நாமோச்சாரணம் பண்ணி வருகிற நல்லோமான நமக்கு இங்ஙனே விஹவேதனைக்குரிய தீவினை எங்கிருந்து வந்ததென்று தலைவி வெறுத்துரைக்கிறாள். திருமாலுரு வொக்கும் வேமரு = ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பொன்னிறமான திருமேனியினொளி கலப்பதனால் தானும்,பொன்னிறம் பொலியப்பெற்ற எம்பெருமானது பெரிய திருமேனி பொன்மயமான பெரிய மேருபர்வதம் போன்றிருக்குமென்க.

English Translation

The Meru mount resembles the Lord Tirumal's frame. The Sun rising over the mount resembles the beautiful radiant discus in the Lord's hand. Seeing similar things, we praise the Lord and his symbols alike, with a heart overflowing with love. How can evil ever come upon us?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்