விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  புலம்பும் கன குரல்*  போழ் வாய அன்றிலும், பூங் கழி பாய்ந்து*
  அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும்,*  ஆங்கு அவை நின்-
  வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக*  வையம்-
  சிலம்பும்படி செய்வதே,*  திருமால் இத் திருவினையே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திருமால் - பிராட்டியினிடத்து மோஹமுள்ளவனே!
புலம்பும் - (விரஹவேதனையால்) கத்துகிற
கன குரல் - கனத்த குரலையுடைய
போழ் வாய் அன்றிலும் - பிளந்த வாயையுடைய அன்றிற் பறவையும்
பூ கழி பாய்ந்து அலம்பும் - அழகிய கழியினுள்ளே புகும்படி பாய்ந்து அலருகிற

விளக்க உரை

அன்றிற் குரலுக்கும் கடலோசைக்கும் ஆற்றாத தலைவியின் நிலைமை கண்டு தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது. அதாவது- நாயகியின் தளர்ச்சியைக் கண்ட தோழி தானும் தளர்ச்சியடைந்து, பாவநாப்ரகருஷத்தாலே நாயகனை எதிரிற் கொண்டு முன்னிலைப்படுத்தித் தன்னிலே யுரைத்த பாசுரம். அன்றி, தோழி தலமைகனை எதிர்ப்பட்டுத் தலைமகளின் ஆற்றாமையை அவனுக்குக் கூறியுணர்த்துவது என்னவுமாம். உன்னிடத்தில் அன்பு கொண்டு தலைவி, உன்னைப் பிரிந்த நிலையில் அத்துயரம் ஒருவாறு தணியும் பொருட்டு உனக்கு வாஹனமாய் உது நித்யஸம்பந்தம் பெற்றுள்ள பெரிய திருவடியின் சிறப்பைப் பாராட்டிக் கூறி நிற்க,’ அதனைக் கண்டு. அதனால், இவள் பிரிவாற்றாத மெல்லிய ளென்று உணர்ந்து அன்றிற் குரலும் கடலொளியும் அவ்வாற்றாமையின் மேலும் தாமும் ஹிம்ஸை பண்ணக் கடவனோ வென்கிறாள். ஆணும் பெண்ணுமான அன்றில் இணைபிரியாமல் நெருங்கி ஒன்றொடொன்று வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னிலர் நெகிழ்ந்தவளவிலே துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொளியாகக் கத்துகிற மிக இரங்கத்தக்க சிறுகுரல் விரஹ வேதனையை வளரச் செய்வதால் “புலம்புங் கன குரற் போழ்வாயவன்றிலும்” எனப்பட்டது. “பெண்ணை மேல், பின்னும்மவ்வன்றிற் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர்வாளாமென் செய்கேன்’ என்று திருமங்கையாழ்வாரும் பெரிய திருமடலில் அருளிச் செய்தார்.

English Translation

O Lord Tirumal! This Tiru-like girl is abused by all for singing the glories of your strong Garuda bird, in the midst of the hoarse double-beaked Anril bird's mating call, and the roar of the surrounding sea flowing into shallow salt pans, Is it proper for you to bring her to this state?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்