- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நாயகனைப் பிரிந்த நாயகி இரங்கியுரைக்கும் பாசுரம் இது. ஆபத்துக்கு உதவுந் தன்மையும் அடியார்களுடைய விரோதிகளை நிக்ரஹித்தற்கு ஏற்ற கருவிகளையுடையவனாருக்குந் தன்மையும் அடியார்க்கு எளியனாயிருக்குந் தன்மையும் எம்பெருமானுக்கு இயற்கையாகவுள்ளன; இத்தன்மைகள் தன் பக்கலில் உதவாமையைக் குறித்துப் பராங்குசநாயகி இறங்குகிறானென்க. “அடைக்கலத்தோங்கு கமலத்தலரயன் சென்னியென்னும் முடைக்கதை தூண் முன்னரனுக்கு நீக்கியை” என்றதனால் ஆபத்துக்கு உதவுந் தன்மையும், “ஆழிசங்க படைக்கலமேந்தியை” என்றதனால் ஆச்ரித விரோதிகளை நிக்ரஹிப்பதற்கு ஏற்ற கருதியுடைமையும் “வெண்ணெய்க் கன்றாய்ச்சி வன்தாம்புகளால் படைக்கலந்தானே.- என்றதனால் அடியார்க்கெளிமையும் தெரிவிக்கப்பட்டனவாம். (என் சொல்லிப் புலம்புவனே.) சிவனுக்குத் துயரந் தீர்க்க ஆயுதமேந்தியுள்ளவனை நோக்கி என் துயரந்தீர்க்கக் கையில் கருவி கொள்ள வேணுமென்று சொல்வேனோ? ஆய்ச்சியர்க்குக் கட்டவு மடிக்கவும் எளியனானவனை நோக்கி எனக்கெளியனாக வேணுமென்று சொல்வேறோ? யாது சொல்லிக் கூப்பிடுவே னென்கிறான். அந்தோ இத்தன்மைகள் பாவியேன் பக்கலில் உதவக் காணவில்லையே! என இரங்கியவாறு.
English Translation
Our Lord the conch-and-discus-wielder rid the skull-bearing Siva of his curse by the lotus-born Brahma. Yet our Lord was bound, beaten and made to weep by the cowherd-dame, for stealing butter. Alas, how shall I call and weep to him for refuge?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்