விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாணிக்கம் கொண்டு*  குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி,* 
  ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை,*  உலகு அளந்த-
  மாணிக்கமே! என் மரகதமே! மற்று ஒப்பாரை இல்லா*
  ஆணிப்பொன்னே,*  அடியேன் அடி ஆவி அடைக்கலமே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உலகு அளந்த - உலகங்களை அளந்து கொண்ட
மாணிக்கமே - மாணிக்கம்போலச் சிறந்தவனே
என் மரகதமே - மரகதப்பச்சைப்போல் எனக்கு இனியனானவனே!
மற்று ஒப்பாரை இல்லா - தன்னையொப்பவர் வேறு எவரையும் உடையனாகாத
ஆணிபொன்னே - மாற்றுயர்ந்த பொன் போல மதிப்பையும் ஒளியையுமுடையவனே!

விளக்க உரை

மாலைப்பொழுது கண்டு வருந்திய நாயகி இரங்கி யுரைத்த பாசுரம் இது. “காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலுருமிந்தோய்” (திருக்குறள்- பொழுது கண்டிரங்கள்-7). என்கிறபடியே காமநோய் மிகவும் முதிர்வதற்கு உரிய காலமான மலைப்பொழுதில் ஆற்றாமை மிகுதியால் தன் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேறு கதியற்றவளாய்த் தலைமகள் தலைமகனைக் கருத்தி ‘உனக்கே என் உயிர் தஞ்சம்; ஆதலால் நீயே என்னை வந்து காத்தருள வேண்டும்’ என்று முறையிடுகிறாள். இப்பாட்டைத் தாய்வார்த்தை யென்பார்க்கு, ‘அடியேனடியாவி’ என்பதற்கு, எனது அடிமையான மகள் என்று பொருள்கொள்ள வேணும். ஆவி- உயிர்போல் அருமையான பெண் என்றபடி, ஆகுபெயர்- ‘அடியேனுடையாவி’ என்பதும் பாடமாம். ஒருவரால் எறியப்பட்டுக் குரங்கின் மீது சென்று விழுந்த மாணிக்கமான அதன் கையில் அகப்பட்டுத் திரும்பமாட்டாது அழிவதுபோல, இருளை அழித்தற் பொருட்டு அதன் மீது சென்று வீழ்ந்த ஸூர்யன் அவ்விருளிற்பட்டு மீளாது மறைந்திட்டானெனக் கற்பனை கூறுப்பட்டது. ஸூர்ய மண்டலத்திற்கு மாணிக்கம் உவமை; இவளுக்குக் குரங்கு உவமை. மாணிக்கம் மீளாக்காணாமற் போதற்கு ஸூர்யாஸ்தமநம் உவமை. மாணிக்கம் நவரத்நங்களுள் ஒன்று; இது செந்நிறமுடையது. நூல்களிற் கருமாணிக்க மென வருதல் அபூதோபமையென்க. இங்கு உபமேயமாகிய இருளின் தன்மையைக் கருதி, குரங்கு, கருங்குரங்கு எனக் கொள்ளப்பட்டது.

English Translation

O Gem Lord who measured the Earth! My Emerald! O Nugget of gold, lord without a peer! Like a monkey picking up a gem and throwing it away, the evening sky has thrown away the golden Sun into darkness. You are the sole refuge for my lowly soul!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்