விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  விளரிக் குரல் அன்றில்*  மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை,*
  முளரிக் குரம்பை இதுஇதுவாக,*  முகில் வண்ணன் பேர்-
  கிளரிக் கிளரிப் பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம்* 
  தளரின் கொலோ அறியேன்,*  உய்யல் ஆவது இத் தையலுக்கே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விளரி - விளரியென்னும் இசையையுடைய
குரல் - குரலையுடைய
அன்றில் - அன்றிற்பறவை
மெல் பெடை - மெல்லிய (தனது) பேடையை விரும்பித் தழுவுதற் கிடமான

விளக்க உரை

பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கிக் கூறம் பாசுரம் இது. காமவிரஹத்தா ண்டாகும் வேதனைகளுள் சிந்தனை பசலை மேனிமெலிவு அழுங்கல் மொழி பல பிதற்றல் முதலிய பலவும் இவளுக்கு நிகழ்ந்தாய் விட்டன; இதுவரையிலும் இவளுடைய தலைவன் இவளை வந்துகூடி உய்யச் செய்யக் காண்கின்லோன்; இனி மரணமொன்றே நிகழாது நிற்பது; அதுவும் நிகழ்ந்த பின்புதான் இவளை வந்து கூடி உய்யச் செய்வதாகவிருக்கிறானோ? என்று தோழி இரங்குகின்றாள். இதனால்,இனி இவளுக்கு ஜீவித்திருத்தல் அரிதாம் என்றவாறு. வடநூலார் க்ரௌஞ்ச மென்று கூறுவதே அன்றிற்பறவையாகாது; இது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் கூடியே நிற்கும்; கணநேரம் ஒன்றை ஒன்றுவிட்டுப் பிர்ந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றையொன்று இரண்டு மூன்றுதரம் கத்திவிட்டு அதன்பின்பும் தன் துணையைக் கூடாவிட்டால் உடனே இறந்து படும். (பகல் முழுவதும் புணர்ந்திருந்து இரவிற்பிரிந்து வருந்துவதாகிய சக்கரவாகப் பறவையும் அன்றிலெனப்படுவது உண்டு.) அன்றிலும் அதன் குரலும் காமாத்தீபகமாய்ப் பிரிந்தார்க்கு விரஹவேதனையை வளரச் செய்யுமென்க. இப்பறவையைப் பனைமரத்தில் வாழ்வதாகவே பலரும் பலவிடத்துங் கூறுவர்; “காவார்மடற் பெண்ணையன்றி லரிகுரலும்” “பெண்ணைமேற் பின்னுமவ்வன்றிற் பெடை வாய்ச் சிறுகுரல்” என்பன திருமங்கையாழ்வார் பாசுரஙகள்.

English Translation

Hearing the repeated curlew-sound of the Anril bird mingling with its tender mate in the thorny nest on a Palm tree in the yard, this girl too repeats the cloud-hued Lord's names firelessly, ruining her health and well being. Is it only after she breaks down completely that she will find her salvation? I do not know

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்