விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உறுகின்ற கன்மங்கள்*  மேலன ஓர்ப்பிலராய்,*  இவளைப்-
  பெறுகின்ற தாயர்*  மெய்ந் நொந்து பெறார்கொல்*  துழாய் குழல்வாய்த்-
  துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும்*  சூழ்கின்றிலர்* 
  இறுகின்றதால் இவள் ஆகம்,*  மெல் ஆவி எரி கொள்ளவே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கூறுகின்ற - (இவள் தாய்மார் விடாமல்) பொருந்தி நடத்துகிற
கன்மங்கள் - (வெறியாட்டு முதலிய) காரியங்கள்
மேலன - மேன்மேலும் உண்டாகாகின்றன;
இவளை பெறுகின்ற தாயர் - இவளைப் பெற்று வளர்க்கிற தாய்மார்.
மெய் நொந்து பெறார் கொல் - உடம்பு வருந்திப்பெற்றாரில்லையோ?

விளக்க உரை

-வெறிவிலக்கத் தொடங்கிய தோழி இரங்கிக்கூறும் பாசுரம் இது. தலைமகள், திருமாலாகிய தலைமகன் விஷயமாக வேட்கைநோய் கொண்டு மேனி மெலிந்து வடிவுவேறுபட, அதுநோக்கிய தாய்மார் ‘இது முருகக் கடவுள் ஆவேசித்ததனாலானது என்று மாறாகத் துணிந்து அதற்குப் பரிஹாரமாக வேலனைக் கொண்டு வெறியாடுவித்தல், ஆடு பலிகொடுத்தல், கள்ளிறைத்தல், இறைச்சிதூவல், கருஞ்சோறு, செஞ்சோறுவைத்தல் முதலிய காரியங்களை இடைவிடாது ஒன்றன்மேலொன்றாகச் செய்யத் தொடங்க, நொயொன்றும் மருந்தொன்று மாதலால், தான் காதலித்த நாயகனுடைய தகுதிக்கு ஏற்றிராத அக்காரியங்களை நோக்கி நாயகி மேன்மேலும் மிக வருந்த, அது நோக்கித் தலைவி நினைவறிந்து வெறிவிலக்கவந்த தோழி, அத்தாய்மார் செவிப்பட முன்னிலைப்படர்க்கையாகக் கூறியதாயிது. இப்போது அவளுக்கு நேர்ந்துள்ள நோயின் ஸ்வரூபத்தையும் அதன் காரண மின்னதென்பதையும் அதனைத் தீர்க்குமுபாயம் இன்னதென்பதையும் ஆராய்ந்து தெளிய கில்லாத இவள் தாய்மார் ஓயாது நடத்துகிற வெறியாட்டு முதலிய காரியங்கள் மேன்மேலும் உண்டாகாநின்றன; அந்தோ! இவளைப்பெற்றதாய் பெறுகின்ற பொழுது மெய்ந்நொந்து பெற்றவளாயும், வளர்க்கின்ற செவிலித்தாயார் தாம் தாம் வருந்திப் பிள்ளை பெற்றவராயுமிருத்தால் இவள் பிழைக்கும்வழியிலே முயலாது இங்ஙனம் இவளை இழக்கைக் குறுப்பான வழியல்லாவழியிலே தலையிடுவார்களோ? விபரீதமான காரியங்களையே இவர்கள் செய்யக் காண்கையாலே இவளை மெய்ந்நொந்து பெறாதே எங்கேனும் விலைகொடுத்து வாங்கினாபோலும். எம்பெருமானது திருத்துழாயை முடியிறச் சூட்டுதலும் அவனது போகஸ்தானமான திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு போதலுமே இந்நோய்க்கு ஏற்ற பரிஹாரமாயிருக்க அவையொன்றுஞ் செய்யக் காண்கிறீலோமே! ஸுகுமாரமான இவளது உயிரை விரஹாக்கி கவர்ந்து கொள்ளும்படி இவட்குத் தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றதே! என்ன பரிதாபம்!! என்றாளாயிற்று.

English Translation

It would apepar that these ladies who surround her, not inquiring of the best ways to retrieve her, never really begot her the hard way. They do not swathe her coiffure with the Lord's Tulasi, nor go circum-ambulating the Venkatam hill. Alas, a burning love sickness is consuming her soul!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்