விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நலியும் நரகனை வீட்டிற்றும்,*  வாணன் திண் தோல் துணித்த*
  வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல,*  மை வரை போல்-
  பொலியும் உருவின் பிரானார் புனை பூந் துழாய் மலர்க்கே*
  மெலியும் மட நெஞ்சினார்,*  தந்து போயின வேதனையே! 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நலியும்நரகனை வீட்டிற்றும் - (உலகத்தை) வருத்துகிற நரகாசுரனைக் கொன்றதும்
வாணன் திண்தோள் துணிந்த வலியும் - பாணாஸுரனது வலிய தோள்களை அறுத்துத் தள்ளிய வலிமையும்
பெருமையும் - (அப்போரில் வெளிக்காட்டிய) தலைமையும்
யாம் சொல்லும் நீர்த்து அல்ல - (எளிமையான) யாம் புகழ்ந்து சொல்லி முடிக்குத் தன்மையானவல்ல;
மை வரைபோல் பொலியும் உருவின் பிரானார் - அஞ்சனகிரிபோல விளங்குகிற வடிவத்தையுடைய அத்தலைவரது

விளக்க உரை

பிரிவாற்றாத தலைவி தலைவனது ஆற்றலைக் கருதிநெஞ்சழிந்து இரங்கும் பாசுரம் இது. நானோவென்னில் எனது நாயகருடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களையும் ப்ரபுத்வத்தையும் நோக்கி ‘நமக்கு அவர் துர்லபர்’ என்று கருதி ஒருவாறு காதலையடக்கி ஆறியிருக்குந் தன்மையுடையேன்; எனது மனமோ அங்ஙனம் ஆறியிராமல் அவனது மாலையைப் பெறுதற்கு ஆசைப்பட்டு அது கிடையாமையால் எனக்கு இப்படிப்பட்ட வருத்தத்தை வினைத்துத்தான் அவனிடம் போய்விட்டது என்று இரக்கத்தோடு உரைத்தானாயிற்று. நரகாஸுரனைக் கொன்று பதினாறாயிரத்தொருநூறு கன்னிகைகளை மணஞ்செய்து கொண்டவரும், பாணாஸுரனது தோள்களைத் துணித்து ஆவன் மகனான உஷை தனது போனான அநிருத்தனை வெளிப்படையாக மணஞ் செய்துகொண்டு கூடி வாழும்படி செய்தவருமான தலைவர் அவர் பக்கற்காதலியாகிய என்னை வந்து அடைந்து இன்பமடைவிக்கவேண்டாவோ வென்பால் அவ்விரண்டு வரலாறுகளையும் எடுத்துக் கூறினாள். தாமே தேவாதிதேவ ரென்று தோன்றும்படி வெளியிட்ட வீர்யசக்தியை ‘பெருமை’ என்றது. வீட்டிற்று உயிர் விடுவித்தது; இறந்தகாலத் தொழிற்பெயர். விடு என்பதன் விகாரமாகிய வீடு என்பதனை பிறவினையான ‘வீட்டு’- பகுதி; று- விகுதி. இனி, வீழ்த்திற்கு என்பது வீட்டிற்று என மரூஉ வாயிற்றென்பாருமுளர். நீர்த்து = நீர்மை என்னும் பண்பின் அடியாய்ப்பிறந்த ஒன்றன்பாற் குறிப்புமுற்று. மை வரை = மேகம் படிந்த மலை என்னவுமாம். பாட்டின் முடிவில் ‘வேதகா’ என்னும் வடசொல் ஐயீறாகத்திரித்தது. வலியின் பெருமையும், என்றும் பாடமுண்டாம்.

English Translation

Even Krishna the dark radiant mountain-like lord, does not have the compassion we seek, though he destroyed Narakasura, cut off the thousand strong arms of Banasura and had the strength to overcome all his detractors. My foolish heart left me seeking the lord's blossoming Tulasi garland. Alas, misery is all that I got in the process.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்