விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உலாகின்ற கெண்டை ஒளி அம்பு*  எம் ஆவியை ஊடுருவக்-
  குலாகின்ற*  வெஞ்சிலை வாள் முகத்தீர்,*  குனி சங்கு இடறிப்-
  புலாகின்ற வேலைப் புணரி அம் பள்ளி அம்மான்*  அடியார்-
  நிலாகின்ற வைகுந்தமோ,*  வையமோ நும் நிலையிடமே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உலாகின்ற - (காதளவுஞ் சென்று மீண்டு) உலாவுகிற
கெண்டை - கெண்டை மீன் வடிவமான
ஒளி அம்பு - ஒளியையுடைய (கண்களாகிய) அம்புகள்
எம் ஆவியை ஊடு உருவ - எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படி
குலாவுகின்ற - (அவ்வம்புகளைப் பிரயோகிப்பதற்கு) வளைகிற

விளக்க உரை

மதியுடம்படுக்கலுற்ற நாயகன் நாயகியின் தோழியரைப் பதிவினாதல் இது. நாயகியும் தோழியும் ஒருங்கிருந்த ஸமயம் நோக்கி நாயகன் அங்குச்சென்று தன் கருத்தைக் குறிப்பிப்பதற்கு ஒரு வியாஜமாக ஊர் வினாவுகின்றானென்க. காதளவும் நீண்டு கெட்டை மீன் வடிமான கண்களாகிய அம்புகள் எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படியாக அவ்வம்புகளைப் பிரயோகிப்பதற்கு வளைந்திருகின்ற புருவமாகிய கொடிய வில்லையுடைய அழகிய முகமுடையவர்களே! என்று நாயகியையும் அவளது தோழியரையும் விளித்தபடி. கண்களை அம்பாகவும் புருவத்தைச் சிலையாகவும் வருணித்தல் கவிமரபு. கையிற்கொள்ளும் வில்லம்புகளால் வருத்தும் உலகவியல்பு’ எனப்பட்டது. பின்னடிகள் பதிவினாவுவன. இவ்வுலகத்தவரினும் இவர்களது வடிவழகு மிக வேறுபட்டுச் சிறந்திருத்தலால் ‘நும் நிலையிடம் வைகுந்தமோ?’ என்றது; இவர்களைக் கண்டது இவ்வுலகத்திலாதலால் ‘வையமோ?’ என்றது.

English Translation

O Bright-faced Ladies with fish-like dart-sharp eyes, shot with bow-like eyebrows to pierce through our souls! Is your place of permanent residence the Vaikunta that devotees of the ocean-reclining lord prefer, or is it the Earth?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்