விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தளர்ந்தும் முறிந்தும்*  வரு திரைப் பாயல்,*  திரு நெடுங் கண்-
  வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும்,*  மால் வரையைக்-
  கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்*
  அளைந்து உண் சிறு பசுந் தென்றல்,*  அந்தோ வந்து உலாகின்றதே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பாயல் - (ஆதிசேஷனாகிய) சயனத்தில்
திருநெடு கண் வளர்ந்தும் - அழகிய நீண்ட திருக்கண்களுறங்கியும்
அறிவுற்றும் - (அவ்வுலகத்தில் யாவும்) அறிந்தும்
வையம் விழுங்கியும் - பிரளயகாலத்திலே உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும்
மால்வரையை கிளர்ந்து மறிதர தீண்டு எடுத்தான் - கோவர்த்தனகிரியை மேலெழுந்து குடையாகக் கவியும்படி பெயர்த்தெடுத்தும் உதவிகிற எம்பெருமானது

விளக்க உரை

நாயகனது திருத்துழாயிற்பட்ட தென்றல், நாயகி மகிழ்நதுரைக்கும் பாசுரம் இது. நாயகனது மேனியோடு ஸம்பந்தப்பட்ட பொருள் தன் உடம்பின்மீது வந்து பட்டுத் தனது பிரிவாற்றாமைத் துயரைச் சிறிது தணிப்பித்தலாகிய ஸந்தோஷத்தைத் தலைவி தோழிக்கு உரைக்கின்றாளென்க. கொந்தளித்து வீசுகின்ற அலைக்கிளர்ச்சியையுடைய திருப்பாற்கடலில் சேஷசயனத்தில் உறங்குவான் போல் போகு செய்தும் பிரளயகாலத்தில் உலகங்களை வயிற்றினுட்கொண்டு காத்தும் கோவர்த்தநகிரியைக் குடையாகவெடுத்துப் பிடித்துப் பெருமழைத் துன்பத்தைப் போக்கியும் உபகரித்தருள்கின்ற எம்பெருமானுடைய திருமுடியில் அணிந்துள்ள திருத்துழாயை யளைந்த புதிய இளந்தென்றற் காற்றானது மகிழ்ச்சியுண்டாகும்படி என்மேல்வந்து வீசுகின்றது என்றாளாயிற்று. இனி, இதனை, வழக்கம்போலத் தென்றல் வரவுகண்டு அதற்கு வருந்தத் தொடங்கிய நாயகியை நோக்கித் தோழி ‘இதை நீ வெறுந்தென்றலென்று கருதாதே; அவனுடம்பிற்பட்டு வருகிறது காண் இது; இது அவன் வரவுக்கு அறிகுறி’ என்று கூறிச் சோகந்தணிக்கிறதாகவுங்கொள்வர்.

English Translation

On a bed in the sea, withwaves that rise and recede, the lord withSri goes to sleep, then wakes up, swallows the Universe, then holds a hill upside down to save his cows. A soft tender breeze carries a little of the fragrance from his Tulasi wreath and wanders here, what a wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்