விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வால் வெண் நிலவு*  உலகு ஆரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்,*
  விண் சுரவி சுர முதிர் மாலை,*  பரிதி வட்டம்-
  போலும் சுடர் அடல் ஆழிப் பிரான் பொழில் ஏழ் அளிக்கும்* 
  சால்பின் தகைமைகொலாம்,*  தமியாட்டி தளர்ந்ததுவே? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விண் - ஆகாயத்தில் நின்று
வால் வெள் நிலவு - மிகவும் வெளுத்த நிலாவாகிய
பால் - பாலை
உலகு ஆர சுரக்கும் - உலகமெங்கம் நிறையும்படி சுரந்து சொரிகிற

விளக்க உரை

பிறைபடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது. மாலைப்பொழுதுக்கும் இளம்பிறைக்கும் வருந்தும்படி இவளைத் தனியே விட்டிருத்தல் உலக முழுவதும் ரக்ஷிக்கும் அவனுடைய பெருந்தன்மைக்குச் சிறிதும் ஏழாது என்கிறாளாயிற்று. ஆகாசத்தில் நின்றும் மிகுந்த வெளுத்த நிலாவாகிய பாலை உலகமெங்கும் நிறையச் சுரந்து சொரிகிற சந்திரனாகிய காமதேநுவின் சுரப்பு அதிகரித்திருக்கின மாலைப்பொழுதிலே இத்தலைவி தனிமைப்பட்டுத் தளர்ந்திருப்பதானது ஆழியங் கையவன் அனைத்துலகங்களுயும் காத்தருளுந் திறத்துக்குப் பொருந்துமோ? (பொருந்தாது) என்றவாறு. நிலாவினிடத்துப் பாலின் தன்மையையும்,அதனை வெளியிடுகிற அம்ருத கிணனான சந்திரனிடத்துப் பால்சுரங்கும் பசுவின் தன்மையையும் ஏற்றிக்கூறினது ரூபகாலங்காரம். (கம்பராமாயணம் சுந்தரகாண்டம் – ஊர் தேடு படலம் 56.) “அருந்தவன் சுரபியே ஆதிவானமா,விரிந்த பேருதயமே மடிவெண்டிங்களா, வருத்தலின் முலைக்கதிர் வழங்கு தாரையாச், சொரிந்த பாலொத்தது நிலவின் தோற்றமே” என இவ்வர்ணனைப் பிறவிடத்துஞ் சிறிது வேறுபடக் கூறப்பட்டிருக்குமாறு காண்க. உலகு ஆர்ச்சுருக்கும்- உலகமாகிய தாழி நிறையும்படி சுரக்குமென்க. விண்சுரவி- தெய்வப்பசு, ஸுரபி: என்னும் வடசொல் சுரவியெனத் திரிந்தது. சுர- சுரப்பு; முதனிலைத் தொழிற்பெயர். பரிதி- வடசொல் (பொழிலேழனிக்கும்) பொழில்- உலகம். இனி, பொழில்- சோலையுமாம்; உலகங்களை எம்பெருமானுடைய சிங்காரப் பூந்தோட்டமென்ப; “பிரான் பெய்த காவுகண்டீர் பெருந்தேவுடை மூவுலகே” 6-3.5) என்பர் திருவாய்மொழியிலும், இப்பாட்டுக்கு ஸ்லாபதேசப் பொருளாவது: உரிய காலத்தில் பேறு கைபுகாமையாலே ஞானவிளக்கமும் பாதகமாக ஆழ்வார் அடைந்த தளர்ச்சியைக் கண்ட அன்பர்கள் நொந்து உரைத்த வார்த்தையாம். (பிரான பொழிவேழளிக்குஞ் சால்பின் தகைமை கொலாம் தமிபாட்டி தளர்ந்ததுவே) எம்பெருமானுக்கு இயல்பான ஸ்வாக்ஷகத்வமும், இவ்வாழ்வார் திறத்தில் நிகழா கொழிவதே! என்று சங்கித்தபடி. ‘சால்வின்’ என்றும் பாடமுண்டாம். வால் வெள்- ஒருபொருள் பன்மொழி. “நிலவுகார” என்றவிடத்து, ‘நிலவு’ என்னாமல் ‘நீல’ என்றும் பிரிக்கலாம்; “குறிய தன் கீழ் ஆக்குறுதலுமதனோடு, உகர மேற்றலுமியல்புமாந் தூக்கின்” என்ற நன்னூல் அறிக.

English Translation

The sky-cow with moon-udders pours moonlight-milk over the world in the late evening, giving strength to all but grief to this girl, Is this the way the golden-orbed discus-bearing lord, Protector of the seven worlds, gives succour? Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்