விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஊழிகள் ஆய்*  உலகு ஏழும் உண்டான் என்றிலம்,*  பழம் கண்டு-
  ஆழி களாம் பழம் வண்ணம் என்றேற்கு,*  அஃதே கொண்டு அன்னை-
  நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்*
  தோழிகளோ! உரையீர்,*  எம்மை அம்மனை சூழ்கின்றவே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உலகு ஏழும் உண்டான் - உலகமுழுவதையும் திருவயிற்றில் வைத்துக் காத்தருளியவன்
என்றிலம் - என்று (யாம் தலைவனது பெயர் பெருமை தொழில் முதலியவற்றை வெளிப்படையாகக் ) குறினோமில்லை.
களா பழம் கண்டு - களாப்பழத்தைப் பார்த்து
பழம் வண்ணம் ஆழி என்றேற்கு - ‘இப்பழத்தின் நிறம் கடலின் நிறம்’ என்று (குறிப்புப் பொருளொன்றுங் கருதாமல் இயல்பாகச்) சொன்ன எனக்கு
அஃதே கொண்டு - அந்தச் சொல்லையே பொருளாகக் கொண்டு
அன்னை - (எனது) தாய்

விளக்க உரை

தாயின் முனிவைத் தலைவி தோழியர்க்கு உரைத்த பாசுரம் இது. நாயகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து நாயகி வருந்துமளவில் அக்களவொழுக்கம்மெல்ல வெளிப்பட்டு ஊரெங்கம் பழி பரவ, அதனையறிந்த தாய் ‘இது நம் குடிக்குக் குறையாம்’ என்று கருதி இவளை நிர்பந்தத்திலே வைத்திருக்க, அவளுக்கு அஞ்சி நாயகி தன் ஆற்றாமையால் வாய் பிதற்றுதலொன்றுஞ் செய்யாத ஆற்றாமையை அடக்கிக் கொண்டிருக்க, அவ்வளவிலே சிலர் களாப்பழங்கொண்டு விற்க, அதனை நோக்கி நாயகி ‘இதன் நிறம் கடல்போலுள்ளது’ என்று பாராட்டிக் கூற, ஏற்கனவே இவன்மேல் குறிப்புக் கொண்டுள்ள தாய் ‘இவள் இப்படி சொன்னது நாயகனது நிறத்தைப் பாராட்டிக் கூறியபடியாம்’ என்று உட்கொண்டு ‘இப்படியும் ஒரு அடங்காத்தன்மை யுண்டோ’ என்று வெறுக்க, அதற்குக் கலஙகிய நாயகி தோழியரை நோக்கி ஒருவகையான உட்கருததையுங் கொண்டு சொல்லவறியாத எனது தன்மையை நீங்கள் அவளுக்குச் சொல்லி அவளுடைய கோபத்தைத் தனிப்பீராக வென்று வேண்டிக் கொள்ளுகிறாளென்க.

English Translation

O Sakhis! Seeing the dark Kala fruit, I did not say the lord swallowed the seven worlds age after age, but only said, "The sea has the kala hue". On that account alone my mother says, "She is guilty, she spoke of the hue of the lord who swallowed the Earth", and beats me, Tell me, what should I do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்