விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உண்ணாது உறங்காது*  உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்*
  எண் ஆய் மிளிரும் இயல்வின ஆம்,*  எரி நீர் வளி வான்-
  மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள்*
  கண் ஆய் அருவினையேன்,*  உயிர் ஆயின காவிகளே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

காலிகள் - செங்கழுநீர்ப்பூக்காளனவை
உண்ணாது - உண்ணாமலும்
உறங்காது - தூங்காமலும்
உணர்வு உறும் - (எப்பொழுதும் த்யாகரூபமான) ஞானத்திற் பொருந்தின
வைகுந்தம் அன்னான் - ஸ்ரீவைகுண்டத்தை யொத்து எப்பொழுதும் அநபவிக்கத் தக்கவளான தலைமகளினுடைய

விளக்க உரை

கீழ் “புலக்குண்டலப் புண்டரீகத்த” என்ற பாட்டுப் போலவே இப்பாட்டும் - தலைவன் பாங்கனுக்குக் கழற்றெதிர்மறுதல். இத்துறையின் விரிவு. அப்பாட்டினுரையில் காணத்தக்கது. கண்ணால் காணப்பட்ட நாயகியினுடைய கண்களினழகு இவ்வுலகப் பற்றை நீத்து ஊணுமுறக்கமுமற்று போக நிலையிற் பயின்று அதில் தேர்ச்சிபெற்ற மஹா யோகிகளையும் வசப்படுத்திக்கொள்ள வல்லது என்றதனால், தான் அக்கண்ணழகில் ஈடுபட்டதைக் குறித்து நீ என்னைப் பழிக்க இடமில்லையென்று பாங்கனை நோக்கி நாயகன் கூறினானாயிற்று. வாதிகேணரி அழகிய மணவாளச் சீயர் வேறு வகையாகக் கொள்வர்;- தலைமகளை இயற்கையிற் கலந்து பிரிந்த தலைவன் தன் உறாவுதல் கண்டு வினாவின் பாங்களைக் குறித்து உற்றதுரைத்த பாசுரம்’ என்றார். கழற்றெதிர்மறுத்தலாகவே நம்பிள்ளை திருவுள்ளம்.

English Translation

This girl is of excellence like the Vaikunta of the lord who is Earth, water. Water, fire, air, and space Her eyes are like these lotus flowers that his sinner-self always loves to see, with such a radiance as can attract even Yogis who pursue consciousness without food or sleep.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்