விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கற்றுப்பிணை மலர் கண்ணின் குலம் வென்று,*  ஒரோ கருமம்-
  உற்றுப் பயின்று செவியொடு உசாவி,*  உலகம் எல்லாம்-
  முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ்*
  உற்றும் உறாதும்,*  மிளிர்ந்த கண் ஆய் எம்மை உண்கின்றவே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கன்று பிணை - இளமையான பெண்மான்களுடைய
மலர் கண்ணின் - பரந்த கண்களின்
குலம் - சாதியை
வென்று - ஜயித்து
ஒரே கருமம் உற்று - ஒரு காரியத்திலே பொருந்தி

விளக்க உரை

தலைவிநோக்கின் வாசிகண்டு தலவைன் குறிப்பறிந்து உரைத்தல் இது. இப்பாட்டு நெஞ்சை நோக்கித் தன்னுள்ளே சொல்லியது. ‘தலைமகள் நோக்கிலே விடுபட்ட தலைமகன் அக்கண்கள் தனக்குப் பாதகமாகிறபடியைப் பாங்கனுக்குச் சொல்லுகிறான்’ என்றுங் கொள்வர். இளைய மான்பேடை மருண்டு நோக்கும் நோக்கத்திலும் இவளுடைய நோக்கம் அழகியதென்பதைக் காட்டக் ‘கற்றுப் பிணைமலர் கண்ணின்குலம் வென்று’ எனப்பட்டது. நன்று + முணை, கற்றுப்பிணை, மென்றொடர் வன்றோடாயிற்று. கன்று இளமைப்பெயர், பிணை- பெண்மைப் பெயர். (தொல்காப்பியம் – பொருளதிகாரம்- மரபியல் 5.) “யானையுங் குதிரையுங் கழுதையும் கடமையும், மானோடைத்துங் கன்றெனற்குரிய,” “புல்லாய் நவ்வி யுழையே கவர், சொல்வாய் நாடிற்பிணை யெனப்படுமே” என்பவற்றால் இச்சொற்கள் மானுக்கு உரியனவாதல் அறிக.

English Translation

Her petal-soft town-like eyes stand out in the crowd; with an intent gaze broken by the flap of her ears, as if they were beholding and not beholding the feet of the lord who swallowed and remade the Universe. Those eyes with light in them consume my soul.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்