விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வண்ணம் சிவந்துள*  வான் நாடு அமரும் குளிர் விழிய,* 
  தண் மென் கமலத் தடம் போல் பொலிந்தன,*  தாம் இவையோ- 
  கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல் செய்தேற்கு*
  எண்ணம் புகுந்து,*  அடியேனொடு இக் காலம் இருக்கின்றவே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இவையோ தம் - இத்திருக்கண்களோ
கண்ணன் - கிருஷ்ணாவதாரஞ் செய்தவனும்
திருமால் - திருமகள் கணவனுமான பெருமானுடைய
திருமுகம் தன்னொடும் - திருமுகமண்டலத்திலே
காதல் செய்தேற்கு - வேட்கை கெண்டிருக்கிற என்னுடைய

விளக்க உரை

நாயகனை இயற்பழித்த தோழிக்கு நாயகி இயற்பட மொழிதல் இது. அதாவது- நாயகனைப் பிரிந்து நாயகி வருந்தும் நிலையில் அவளைத் தோழி பலவிதங்களாலும் ஆற்றுவதுண்டு; நாயகனுடைய கொடுமையைச் சொல்லிப் பழித்து அம்முகத்தாலே ஆற்றுதலும் ஒருவிரதமாதலால், அவ்விதமாகச் சிறிது ஆற்றுதற்பொருட்டுத் தோழி அவன் கொடுமையைச் சொல்லிப்பழிக்க, அது பொறுக்கமாட்டாது நாயகி ‘இப்பொழுதும் அவனது கண்கள் என்னெஞ்சிலும் கண்ணிலும் தோன்றி நீங்காதிருக்கின்றன; இங்ஙனம் அன்போடு அணியனாயுள்ளவனை, அநாதரஞ் செய்து பிரிந்து சென்றாளென்று நீ கொடுமை கூறுகின்றது என்னோ? என்று கூறுகின்றானென்க. சிவந்த நிறமுள்ளவையாய்க் குளிர்ந்த பார்வையுமுடையவையாய்த் தாமரைத்தடாகம்போல விளங்குகின்றவையான இத்திருக்கண்கள் அப்பெருமானது திருமுகமண்டலத்திலே வேட்கை வைத்த எனது மனத்திலே புகுந்து இப்பொழுதும் விட்டு நீங்காமல் என்னோடிருக்கின்றனவே, ஏன் ப்ரமித்துப் பழிக்கின்றாய்! என்றவாறு.

English Translation

Aho! The cool heavenly gaze of these red-lotus-like eyes spreads a radiance everywhere in my love-filled heart. The lord Kirshna, Tirumal, appears with such a face before me, this time to stay on forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்