- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நாயகனை நோக்கி நாயகியினாற்றாமையைத் தோழி கூறுதல் இது. தலைமகனாற்றாமை கண்டு வருந்தாநின்ற தோழி தன் ஆற்றாமையாலே தலைமகன உட்கொண்டு விளித்து முன்னிலைப்படுத்தி, தலைமகள் கடலோசைக்கு ஆற்றாது வருந்தும் நிலையையும், இதுவரையிலும் தான் அவளை ஒருவாறு ஆறிவைத்திருந்தமையையும், இனித் தன்னாலும் ஆற்றவொண்ணாதபடி வருத்தம் விஞ்சுகின்றபடியையும் கூறுகின்றான். நோவுபடுவோரைக் கண்டு தானே இரங்க வேண்டுவது ப்ராப்தம்; அப்படி செய்யாததோடு , இவளது பெண்மையையும் ஸௌகுமார்யத்தையும் இளமையையும் காட்டி இரங்குமாறு யாம் வேண்டிக் கொண்டாலும் இப்பாழுங்கடல் இரங்குகின்றதில்லை; ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்றபடி எவ்வளவு கொடுமையுடையாரும் இங்கும்படியான பெண்தன்மைக்கும் இது இரங்குகிறதில்லை என்றால். மேலில் காணும் கருமைநிறத்தோடு உள்ளுள்ள கருமையையும் (கொடுமையையும்) காட்டுவதற்குக் ‘கருங்கடல்’ என்றது. கறுப்பு வெகுளிப் பொருளாதாதலால் ‘கோபமுடைய கடல்’ என்றுமாம்.
English Translation
The dark ocean does not relent even if we plead mercy, nor pity her for being a helpless female, and continues to shout victory, alas! O Lord who reclines here on a serpent! Is this proper? Alas, no more can she SAVE her charm except through your grace.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்