விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை,*  வல்லி ஒன்றால்-
  விலக்குண்டு உலாகின்று வேல் விழிக்கின்றன,*  கண்ணன் கையால்-
  மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால்* 
  கலக்குண்ட நான்று கண்டார்,*  எம்மை யாரும் கழறலரே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணன் - எம்பெருமானுடைய
கையால் - திருக்கைகளால்
மலக்குண்டு - கடைந்து கலக்கப்பட்டு
அமுதம் சுரந்த - (தன்னிடத்திலுள்ள) அமிர்தத்தை வெளிப்படுத்தின
மறி கடல்போன்று - அலைகிளரப்பெற்ற கடல்போல

விளக்க உரை

இப்பாட்டுக்குத் துறையாவது – தலைவன் பரங்கனுக்குக் கழற்றெதிர் மறுத்தலாம். அதாவது-தெய்வப்புணர்ச்சி புணர்ந்து பின்பு விரஹவ்யஸநத்தினால் மிக மெலிந்து கிடக்கின்ற நாயகனைக் கண்ட தோழன் ‘நாளடைவில் நீ இங்ஙனம் இளைத்து வருவதற்கு யாது காரணம்!‘ என்று கேட்க, தோழனுக்கு உண்மை யொளிக்க வொண்ணாதாகையாலே ‘நான் ஒருத்தி வலையிலே அகப்பட்டேன் காண்‘ என்று தலைமகன் உற்றது கூற, அதுகேட்ட தோழன் ‘கடல்போல் கம்பீரனான நீ ஒரு ஸ்த்ரீ நிமித்தமாக இவ்வாறாயினேனென்பது உனது பெருந்தன்மைக்குத் தகாது‘ என்று இழத்துக்கூற‘ அதற்குத் தலைமகன் ‘என்னால் காணப்பட்ட வடிவை நீ கண்டாயில்லை, கண்டவரெவரும் இவ்வாறு வன்சொற்கூறார், அப்படிப்பட்ட பரமவிலக்ஷணமான வ்யக்தியன்றோ அது‘ என்று அவனோடு மறுத்துரைத்தல். “காணிற் கழறலைகண்டிலே மென்தோட் கரும்பினையெ“ என்ற திருக்கோவையார் காண்க.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்