விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வீசும் சிறகால் பறத்தீர்,*  விண் நாடு நுங்கட்கு எளிது* 
  பேசும் படி அன்ன பேசியும் போவது,*  நெய் தொடு உண்டு- 
  ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார்*
  மாசு இல் மலர் அடிக்கீழ்,*  எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நெய் - (திருவாய்ப்பாடியிலே) நெய்யை
தொடு உண்டு - கைதொட்டுக் கவர்ந்து அமுது செய்து
ஏசும்படி - (பலரும்) பரிஹஸிக்கும்படி
அன்ன செய்யும் - (மற்றும் பல) அப்படிப்பட்ட காரியங்களைச்  செய்தருளிய
எம் ஈசர் - எமது தலைவரும்

விளக்க உரை

இப்பாசுரம் வண்டு விடு தூது பிரிந்து போன நாயகன் வந்திடுவனென்று அறியிருதாக வொண்ணாதே அவன் வரவுக்கு விரைந்து ஆள்விடும்படியாயிற்று ஆற்றாமைமிகுதி; ஆகவே ஏழைகளைத் தூதாக நாயகனான ஸர்வேச்வரன் பக்கலிலே போகவிடுகிற நாயகியின் பாரையாய்ச் செல்லுகிறது. எம்பெருமானது திருவடித்தாமரைகளின் கீழ் எம்மை அடைவிக்கவல்ல வண்டுகளே! நீங்களோ விரைந்து செல்லத்தக்க கருவியையுடையவர்களாயிருகின்றீர். நானோ அப்படிப்பட்ட வலிமையில்லாத மெல்லியலாய் இட்டகாலிட்ட நையனாயிருக்கும் தன்மையையுடையேன்; எம் காதலர் வீற்றிருக்கிற பரமபதமும் உங்களுக்கு எட்டிப் பிடிக்கலாம்படி யிராநின்றது; எனக்கோ அது சென்று சேர்தற்கு அரிதாயிருக்கின்றது. நீங்கள் தூது செல்லுதற்குப் புறப்படும்பொழுது, எனக்காக நீங்கள் அவரிடம் சொல்ல நினைத்திருக்கும் வார்த்தைகளை என் பக்கலிற் சொல்லிக் காட்டியும் போகவேணும் என்றால். அங்குச் சொல்ல வேண்டிய வார்த்தைகளை இங்குத் தன்பக்கல் சொல்லி காட்டுமாறு வேண்டியதனால், நீங்கள் அதற்குப் பேசும் பேச்சுக்களை இங்கு என்முன் சொன்னால் அப்பேச்சுக்களில் ஏதேனுங் குறைவு உண்டாகில் அதனை யான் திருத்தித் தருதலுமின்றி உங்கள் பேச்சின் சாதுர்யத்தினால் அவர் விரைவில் வந்திடுவரென்னுந் துணிகவ யடைந்து அதுவரை ஆறியிருப்பேனென்பதை வெளியிட்டாளாயிற்று.

English Translation

O Bumble bees that unite me to the soles of my perfect lord. The lord of gods who was abused for stealing butter! You have wings that can take you to Vaikunta easily. Before you go, left me what you intend to say to him about me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்