- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இப்பாட்டுக்குத் துறை கால மயக்கு. கீழே “ஞாலம் பனிப்ப” என்ற ஏழாம்பாட்டுக்கும் “கடல் கொண்டெழுந்தது வானம்” என்ற பதினெட்டாம் பாட்டுக்கும் போலே, மேல் “மலர்ந்தே யொழிந்தில” என்ற அறுபத்தெட்டாம் பாட்டுக்கும் துறை இதுவே. இப்பிரபந்தத்தில் காலமயக்கு அடுத்தடுத்து வருவதற்குக் காரணம்- நாயகி பின்வரஹகாலம் நீட்டித்தலென்றும், “இந்நின்ற நீர்மையினிமாமுறாமை” என்று தம் வேண்டுகோளை விண்ணப்பஞ்செய்த பொழுதே எம்பெருமானைச் சேரவேண்டியிருக்க அப்பேறு கிடையாமையாலுண்டாய ஆழ்வாரது ஆற்றாமையின் மிகுதியென்றுங் கூறுவர். கார்காலத்திலே மீண்டு வருகிறேனென்று சொல்லிப்போன நாயகன் வாராமல் விளம்பிக்க; அக்காலம் வந்தவாறே நாயகி கலக்கமடைய ‘இது அவன் சொன்ன காலமன்று’ என்று தோழி காலத்தை மயக்கியுரைத்து அவளது கலக்கத்தைத் தீர்க்கிறாள். “காரெனக் கலஞ்கு மேரெழிற்கண்ணிக்கு, இன்துணைத்தோழி அன்றென்று மறுத்தது” என்று திருக்கோவையாருரையுங் காண்க. இது ‘பருவமன்றென்று கூறல்’ என்றும் வழங்கும்.
English Translation
The lotus-dame Lakshmi responding to the lord's call in the ocean, holds his white wave-hands, and joins him on his serpent couch, Seeing this, Earth Dame with her sky mouth cries, "Tirumal is wicked" and rains tears that flow down her mountain-breasts as rivers.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்