- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கடலோசைக்கு ஆற்றாத நாயகி இரங்கியுரைத்த பாசுரம் இது. பிரிந்தார்க்குக் கடலோசையானது மிகவும் காமோத் தீபகமாயிருக்கும். அக்கடலோசையால் தன் உடம்பு இளைக்கையில் கைவளைகள் கழன்று விழுவதைக்கண்ட பராங்குச நாயகி ‘பரிபூர்ண சக்தி வாய்ந்த எம்பெருமான் மந்தரகிரியை மத்தாக நாட்டி வாசுகியைக் கடை கயிறாகப் பூட்டித் தேவரசுரர்களாலும் தனது திருக்கைகளாலும் இடமும் வலமுமாக இழுத்துக்கடைந்து இக்கடலில் நின்றும் அமிர்தத்தை வலிய எடுத்துக்கொண்டு போய்விட்டான்; அவ்வமுத்தை மீண்டும் தன் வலியால் வாங்கிக் கொள்ளமாட்டாத இக்கடல் (‘வலியாரிடத்து வலிமைகாட்ட மாட்டாதவன் எளியாரை வலிந்து நலிவன் என்னுமாபோலே) மெல்லியலான என்னிடத்தே தன் வலிமைகாட்ட வேண்டி, யான் வியாபாரிகளிடத்து விலைகொடுத்து வாங்கிக்கொண்ட சங்கு வளைகளைத் தான் வலியக் கவர்ந்துகொண்டு போகக் கருதி, அதற்குத் தன் வலிமை போதாதென்று திருத்துழாயையும் துணைக்கொண்டு, ஜ்ஞாதிகள் தாயப்பொருளை வலியப் பெறும்பொருட்டு மேலெழுந்து வந்து போர்க்கும் அழைப்பதுபோல, தானும் தனது மிக்க வொலியால் என்னை அறைகூவுகின்றது’ என்று தன் ஆற்றாமையை வெளியிடுகிறாள்.
English Translation
The angry ocean, peeved on losing its ambrosia to the wonder-lord who churned it with a mount-and-snake, calls me for a flight, like a contender, claiming as its property, these bangles! brought from the share-gypsies and also takes the fragrant Tulasi on its side, alas!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்