விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும்,*  இப் பாய் இருள் போல்- 
  கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம்,*  காள வண்ண-
  வண்டு உண் துழாய்ப் பெருமான் மதுசூதனன் தாமோதரன்*
  உண்டும் உமிழ்ந்தும் கடாய,*  மண் நேர் அன்ன ஒள் நுதலே! 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

காள வண்ணம்                       - கறுத்த திருநிறத்தையும்
வண்டு உண் துழாய்             - வண்டுகள் தேனுண்ணப்பெற்ற திருத்துழாய் மாலையைமுடைய
பெருமான்                                 - ஸர்வேச்வரனும்
மதுசூதனன் தாமோதரன் - மதுஸூதநனென்றும் தாமோதரனென்றும் திருநாமங்களை யுடையவனுமான திருமால்
உண்டும்                                      - (பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டும்

விளக்க உரை

இருளுக்கு ஆற்றாது நாயகி, அவ்விருளின் கொடுமையைத் தோழிக்குக் கூறுதல் இது. எம்முடைய ஆயுஸ்ஸில் இதுகாறும் யாம் தினந்தோறும் இருட்பொழுதைப் பார்த்திருக்கிறோம்; அவற்றுக்கெல்லாம் ஓர் எல்லை உண்டு; வருத்தத்தை வளரச்செய்வதுமான ஓர் காளராத்ரியை எங்கும் எப்பொழுதும் கண்டதும் கேட்டதுமில்லை யென்று வருந்திக் கூறுகின்றாள். இருளின் கொடுமையைக் கூறுமிப்பாசுரத்தில் எம்பெருமானுக்குக் ‘காளவண்ணம் மரமேனியைக் காட்டி வருந்துகின்றது என்ற கருத்தைத் தோற்றுவிக்கு மென்னவாம். அன்றி, ‘காளவண்ணம்’ என்று விக்ஷேமிட்டது- இவ்விருட் பொழுதானது எம்பெருமானுடைய இருளன்ன மரமேனியைக்காட்டி வருத்துகின்றது என்ற கருத்தைத தோற்றுவிக்கு மென்னலாம். அன்றி, ‘காளவண்ணம்’ என்பதை எம்பெருமானுக்கு விசேஷணமாக்காமல் வண்டுக்கு விசேஷணமாக்கவுமாம்.

English Translation

O Bright Girl! Your forehead has the radiance of the Earth that the dark-hued bee-humming Tulasi-garland lord Madhusudana, Damodara, swallowed, remade and straddled. Earlier too we have seen many dark colours, but never known on heard of such darkness as this.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்