விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மெல்லியல் ஆக்கைக் கிருமிக்,*  குருவில் மிளிர்தந்து ஆங்கே*
  செல்லிய செல்கைத்து உலகை என் காணும்,*  என்னாலும் தன்னைச்-
  சொல்லிய சூழல் திருமால் அவன் கவி ஆது கற்றேன்?* 
  பல்லியின் சொல்லும் சொல்லாக்*  கொள்வதோ உண்டு பண்டுபண்டே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மெல இயல் - மென்மையான தன்மையையுடைய
ஆக்கை - உடம்பை யுடைத்தான
கிருமி - புழுவானது
குருவில் - புண்ணிலே
மிளிர்ந் தந்து - வெளிப்பட்டு

விளக்க உரை

தலைவி நல்நிமித்தங்கண்டு தான் ஆற்றாமை தணிந்திருக்குமாற்றைத் தோழிக்குக் கூறல் இது. நாயகன் பிரிந்து சென்ற காலத்து அவன் பிரிவை ஆற்றாது வருந்துகிற நாயகி, தன் அருகிலே பல்லி நல்ல இடத்தில் அவன் வரவுக்குப் பொருந்தக் குரல் செய்ததைக் கண்டு அந்த நன்னிமித்தத்தால் நாயகன் விரைவில் வந்து விடுவானென்று துணிந்து சிறிது ஆறியிருக்க, முன்பு அவளுடைய துயரத்தைக் கண்டு தானும் துயருற்றிருந்த தோழி இப்போது இவள் ஆறியிருத்தலைக் கண்டு ‘திடீரென்று நீ இப்படி ஆறியிருப்பதற்கு ஏதேனுங் காரணமுண்டோ? காதலன் கூடியிருக்குங் காலத்தில் உன்னை யிழுத்தணைத்துக்கொண்டு உன்னைப் பிரியேன், பிரிய நேர்ந்தாலும் தரித்திருக்கமாட்டேன். விரைவில் வந்துவிடுவேன் என்று சொல்லுஞ் சொற்களைப் பாராட்டி ஆறியிருக்கிறாயோ? அன்றி வேறு காரணமுண்டோ?’ என்று கேட்க, அதற்குத் தலைவி தான் ஆறியிருத்தற்காரணங் கூறியதுபோலும் இது.

English Translation

I am like the famished maggot born in a fester which knows only to wriggle in the fester; what other world can it know? The lord Tirumal connives to make me sing his praise, but what poetry do I know? And yet, even a lizard's fut is taken as spoken world, this is so from time immemorial.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்