விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  திரிகின்றது வட மாருதம்,*  திங்கள் வெம் தீ முகந்து*
  சொரிகின்றது அதுவும் அது*  கண்ணன் விண்ணூர் தொழவே- 
  சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை*
  விரிகின்றது முழு மெய்யும்,*  என் ஆம் கொல் என் மெல்லியற்கே? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வடமாருதம் - வாடைக்காற்று
திரிகின்றது - உலாவுகிறது;
திங்கள் - (குளிர்ந்த இயல்பையுடைய) சந்திர மண்டலம்
வெம்  தீ - கொடியநெருப்பை
முகந்து சொரிகின்றது - வாரியிறைக்கின்றது:

விளக்க உரை

விரஹவேதனை பெறாமல் வருந்துகின்ற தலைவியின் நிலைமையைக் கண்டு செவிலித்தாய் இரங்கிக் கூறும் பாசுரம் இது. வாடையும் சந்திரனும் இன்பந்தருவனவேயாயினும் விரிஹிகளுக்குத் துன்பந்தருவனவாதலால் அவற்றுக்கு ஆற்றாது வளையிழந்து பசப்பு ஊர்ந்து வருந்தினன் தலைமகள்; அன்னவளைக் கண்டு தாய் இரங்கிக் கூறுகின்றான். திரிகின்றது வடமாருதம் = ஒரு மதயானையானது ஆளைக் கணிசித்து உலாவும்போலே வாடயானது இவளுக்கு வருத்தஞ் செய்தலில் கருத்து வைத்து உலாவுகின்றது என்கை. திரில் என்று விகாரப்படுத்தலுக்கும் போதலால், திரிகின்றது - விகாரப்படுகின்றது அதாவது- தன் தன்மை மாறுபடுகின்றது; தனக்கு இயற்கையான குளிர்ச்சி மாறி வெப்பத்தைக் கொண்டு சுடுகின்றது) என்று முரைப்பர். வடமாறாத மென்றதனால் சரத் காலமென்பது தோன்றும். வடக்கிற் செல்லும் மாருதம் வடமாருதம் என்று கொண்டால் தென்றல் காற்றுக்கும் பேராகலாம்.

English Translation

She only bowed to Krishna's sky-abode, Alas! The dew-laden breeze blows with the heat of the Moon, while the Moon itself sizzles. Her bangles are slipping. Desiring the cool Tulasi garland, her whole body pales. Alas, what is going to happen to our slender one?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்