விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே,* 
  வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று,*  மதி விகற்பால்-
  விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்*
  எண்ணும் இடத்ததுவோ,*  எம்பிரானது எழில் நிறமே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணும் - திருக்கண்களும்
செந்தாமரை - செந்தாமரைப் பூவையொப்ப
கையும் - திருக்கைகளும்
அவை - அத்தாமரைப் பூவையொப்ப
அடியோ - திருவடிகளும்

விளக்க உரை

நாயகனுடைய ரூப வைலக்ஷண்யமுரைத்த நாயகியின் பாசுரம் இது. “கைவண்ணந் தாமரை வாய் கமலம்போலும் கண்ணினையும் மரவிந்தம் அடியுமஃதே” என்றாப்போலேயிருக்கிறது முதலடி. வேறு உபமாநம் கிடைப்பது அரிது என்பது தோன்றப் பல அவயங்களுக்கு ஒருபொருளையே உவமை கூறியது. எம்பெருமானுடைய திருகுகண் திருக்கை திருவடி எண்ணுமுறுப்புகள் ஸாக்ஷாத் தாமரை மலர்களே; திருமேனி நிறமோவெனில், ஒரு அஞ்சன மாமலை போன்றுள்ளது; இதன் வைலக்ஷண்யத்தைச் சொல்லப்புகில், லீலா விபூதியின் பலவுலகங்களிலுமுள்ளா ரெல்லாரிற் காட்டிலும் ஞானத்தில் மேம்பட்ட பரமபதத்து யஸூரிகளுக்கும் இத்தன்மையதென்று நெஞ்சால் நினைக்கவுமாகாதென்றால் வாய் கொண்டு சொல்லவல்லாருண்டோ என்றளாயிற்று மநுஷ்யர்களிற் காட்டில் தேவர்களுக்கும், இந்திராதி தேவர்களிற் காட்டில் ஸ்ருஷ்டிகர்த்தாவான பிரமனுக்கும், அவனிற்காட்டிலும் முக்தர்க்கும், அவர்களிற் காட்டிலும் நித்யர்க்கும் ஞானம் படிப்படியே சிறக்குமென்பது கொள்கை. மிக மேம்பட்ட ஞானிகளாலும் எம்பெருமானது திருமேனியழகு வரையறுக்க வொண்ணாது எனவே, இங்குள்ளாரால் வரையறுக்கலாகாமை தானே விளங்கும்.

English Translation

My Lord's eyes are like lotuses. His hands are the same, his feet too are the same! His dark radiance is the hue of a huge mountain that rises over the skies, boggling the mind, over the world of celestials, beyond the comprehension of anyone, Oh!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்