விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வன் காற்று அறைய*  ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த,*
  மென் கால் கமலத் தடம்போல் பொலிந்தன,*  மண்ணும் விண்ணும்-
  என் காற்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த*
  தன் கால் பணிந்த என்பால்,*  எம் பிரான தடங் கண்களே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எம் பிரான் - எம்பெருமானுடைய
கட கண்கன் - பெரிய திருக்கண்களானவை (எங்ஙனம் விளங்குகின்றனவென்றால்.)
மண்ணும் விண்ணும் - மண்ணுலகமும் விண்ணுலகமுமாகிய விசாலமான இடமிரண்டும்
என் காற்கு - எனது இரண்டு பாதங்களின் அளவுக்கு
அளவு இன்னும் காண்மின் - இடம் போதாத அற்புதத்தை பாருங்கள்

விளக்க உரை

நாயகனது நோக்கில் ஈடுபட்ட நாயகி வியந்துரைத்த பாசுரம் இது. ஸர்வேச்வரனாகிய நாயகன் தன் கடைக்கண் பார்வையால் பராங்குச நயாகியாகிய தன்னை ஒருக்கணித்துக் குறிப்பாக நோக்கிப்போன தன்மையில் ஈடுபட்டுக் கூறியதென்க. எம்பெருமானுடைய திருக்கண்களானவை தனது உலகமளந்த திருவடிகளில் வணங்கின என்னிடத்தில் எப்படியிருந்தனவென்றால், வலிய காற்று வீசுவதால் ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்து மலர்ந்த தாமரைத் தடாகம்போல அழகு மிக்கு விளங்கின- என்கிறாள். ஒருக்கணித்துக் கடைக்கண்ணால் நோக்கிய கண்கள்- வலிய காற்றினால் நேர்நிற்கமாட்டாது ஒருபுறஞ் சாய்ந்து அந்நிலைமையில் மலர்ந்த தாமரைமலர் போன்றனவாம். இப்பாசுரத்தைச் சிறுபான்மை அடியொற்றி ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தர சக்கரத்தில் ‘ஸ்ரீரங்கேசய! சரணம் மமாஸி வாத்யாவ்யாலோலத்கமல தடாக தாண்டவோ” என்று பட்டா அருளிச்செய்த ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தரும்.

English Translation

When the lord grew into the sky, his eyes glanced side wards as if saying, "See, these worlds are not enough for my feet" The wind blowing over me now shows a lake full lotuses, all learning to one side.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்