விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்,*  இவ்வாறு வெம்மை-
  ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்,*  ஓங்கு அசுரர்-
  பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்* 
  மன்றில் நிறை பழி தூற்றி,*  நின்று என்னை வன் காற்று அடுமே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என்றும் - எப்பொழுதும்
புன் - கொடுமை செய்கிற
வாடை இது - இந்த வாடையை
கண்டு அறிதும் - கண்டறிவோம்!
இ ஆறு வெம்மை உருவம் - இப்படிப்பட்ட (வாடையினுடைய) வெப்பத்தின் தன்மையையும்

விளக்க உரை

வாடைக்கு வருந்தின நாயகியின் வார்த்தை இது. பிரிந்த நிலையில் பல பொழுதும் வாடை வருத்துதலால் அதனைப் பற்றி அடிக்கடி கூறி அலற்றும்படியாயிற்று. ஆகவே கூறியது கூறல் (புநருக்தி) என்னுங் குற்றத்திற்கு இடமில்லாமை உணர்க. இங்ஙனம் விருவன வேறு சிலவற்றிற்கும் இவ்வாறே கண்டு கொள்க. எப்பொழுதும் கொடுமை செய்வதையே இயல்பாகக்கொண்ட இந்த வாடையை இன்று நேற்றல்ல, நெடுநாளாகவே கண்றிவோம். ‘வாடை வருத்துகிறது’ என்று பொதுப்படக் கூறமுடிவதேயன்றி இன்ன வடிவமாய் இன்ன குணத்தால் இன்னது செய்து வருத்துகிறதென்று ஒருவகையாலும் விவரித்துக் கூறக்கூடாதபடியுள்ளது இதன் கொடுமை; ஆஸுரப்ரக்ருதிகளான துஷ்டர்களை யொழித்து சிஷ்யர்களான அடியாதைக் காத்தருளுமியல்வுடைய பெருதமான் எனக்குக் கொடியதான வாடை வருத்துதலைக் காத்தருளுமியல்வுடைய பெருமான் எனக்குக் கொடியதான வாடை வருத்துதலைத் தவிர்த்து அடிமையாகிய என்னை ரக்ஷித்தருள தொழிவதே!; நான் வாடைக்கு வருந்துவதைக் கண்டு ஊரார் அலர்தூற்றும்படியாயிற்றே! இப்படியன்றோ என்னை இவ்வாடை கொலை செய்கின்றது! என்கிறாள்.

English Translation

With no grace forthcoming today from the lord who rides the Garuda bird and I destroys tyrant Asuras, the strong southern winds blow in the courtyard for long hours and heap slander to hurt me. We have seen such harsh winds before but never such heat, such fury, such destruction.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்