- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இருள் கண்டிரங்கிய தலைமகள் தோழியர்க்கு வரைவு விருப்புரைத்தல் இது. பகற்பொழுது கழிந்து எங்கும் இருள் பரவியது கண்டு வருந்தின தலைமகள் ‘உறவினர் என்னைக் கலியாணஞ்செய்து கொடுப்பது என்றைக்கோ?’ என்று தோழியரை நோக்கிக் கூறுகின்றாளென்க. தகுதியான ஆபரணங்களையுடைய தோழியர்களே!, ஸூர்யனாகிய ஒரு யானையானது அஸ்தமன பர்வதத்திலே வீழ்ந்து மறைய, திரளாகப் பார்த்த நீலநிறத்தையுடைய இரவாகிற யானைகளெல்லாம் வரிசையாக எதிரில் வந்து சேர்ந்தன; (ஸூர்யன் அஸ்தமிக்கவே இருட்பொழுது வந்து விட்டது) இப்போது விரஹ வ்யாஸநம் அஸஹ்யமா யிருக்கையாலே, பூதேவிக்கும் ஸ்ரீதேவிக்கும் கணவனான எம்பெருமான் தனது திருத்துழாய்மாலையை எனது தலைமயிரிலே தகுதியாகச் சூட்ட எனது தாய்மார் என்னைக் கடாக்ஷிப்பது எந்நாளோ? என்றது- “ அன்றிப்பின் மற்றொருவற்கென்னைப் பேசலொட்டேன் மாலிருஞ் சோலை யெம்மாயற்கல்லால், கொற்றவனுக் கிளவளாமென்றெண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே” என்றாற்போல அப்பெருமானுக்கு என்னைத் தாரைவார்த்துத் தத்தம் பண்ணுவதற்குத் தாய்மாருந் தோழிமாரும் விரைந்து காரியம் நடத்தவேணு மென்றவாறு.
English Translation
Ladies! The gold caparisoned male elephant the sun, just went over the western hills, and a horde of dark elephants, the night came to surround him everywhere. Will we get to wear in our curly locks the cool Tulasi garland from the idegroom lord of Sri and Bhu? Oh, when will our mothers see us thus? Alas!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்