- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தன் மகள் சென்ற சுரத்தருமையை நற்றாய் கூறியிரங்கல் இது. களவு நெறியில் நாயகியைப் புணர்ந்த நாயகன் பழி பரவுதல் கண்ட தோழியினால் விலக்கப்பட்டு அதன் பின் உடனே அவளை வெளிப்படையாக மணஞ்செய்து கொள்ளுதல் உண்டு; அங்ஙனஞ்செய்யானாயின் அப்பழி அடங்குமாறு சில நாள் நாயகியை ஒருவாறு பிரிந்திருப்பதோ, நாயகியை உடன் கொண்டு தன்னூர்க்குச் செல்லுதலோ ஏதேனுமொன்று முறைமையாய் நிகழும். அவற்றுள், நாயகன் நாயகியை அரிய பெரிய காட்டுவழியாக உடன்கொண்டு போனமையைத் தோழியாலறிந்த செவிலித் தாய் அதனை நற்றாய்க்குத் தெரிவிக்க, அவள் மகள்சென்ற அப்பாலை நிலத்தின் பலவகைக் கொடுமைகளையும் மகளது மிக்க ஸௌகுமார்யத்தையும் கருதிக் கவலைப்பட்டு இது கூறுகிறாளென்க. புணர்ந்து பிரிந்த நாயகியானவள் நாயகன் மீண்டும் வருமளவும் பொறுத்திருக்க மாட்டாமல் ஆற்றாமை மிகுகையாலே பெற்றதாய்க்குந் தெரியாதபடி இரவில் தனிவழியே புறப்பட்டு நாயகனிருப்பிடத்தை நோக்கிச் செல்ல, அவளைப் படுக்கையிற் காணாத தாயார் வழியில் நேரக்கூடிய அபாயங்களை நினைத்துச் சோகிக்கிறாள் என்பதுமுண்டு.
English Translation
Oh, the sinner that I am My fragile fawn-like daughter who has for long been worshipping Krishna's feet has gone. The desert that surrounds us is filled with terrible bow-wielding hunters. Cattle stealers, murderers and youthful swift runners whose drums bear all night.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்