- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
மாலைப் பொழுதுக்கு ஆற்றமாட்டாது வருந்தியிருக்குமிருப்பிலே அதற்கும் மேலாக வாடை வந்து வருத்த, அதற்குத் தலைமகள் இரங்கிக் கூறும் பாசுரமிது. வாடையாலுண்டாகிற வருத்தத்தின் மிகுதியை நோக்குமிடத்து மாலைப்பொழுதாலுண்டாகிய வருத்தம் இனிதென்று தோன்றுதலால், தலைவனைப் பிரிந்து அவனது ப்ரஸாதமான திருத்துழாயையாகிலும், பெற்றுத் தரிக்க ஆசைப்பட்ட ஸ்த்ரீகளுக்கு மாலைப்பொழுது பெய்த உதவியையெல்லாம் கொள்ள வந்து இவ்வாடை வீசுகின்றது என்கிறாள். மாலைப்பொழுதானது மற்றவற்றையெல்லாம் கொள்ளை கொண்டாலும் உயிரை மாத்திரமாவது கொள்ளாது விட்டது; இவ்வாடை அதனையும் மிச்சமில்லாதபடி கொண்டுபோக வந்ததென்கிறளென்க. இதுவோர் பனிவாடை = ‘இது’ என்று சுட்டினது- அந்த வாடையின் கொடுமையை வாய்கொண்டு கூறமுடியாமல் கையால் குறித்துக் காட்டினபடி. ‘ஓர்வாடை’ என்றது- இதற்கு முன்புவந்த வாடைகள் போலன்றியே இது பெண்பிறந்தாரை மிக வருந்திப் புதியதாய் ஒப்பற்ற ஒருதுணை வேண்டாது தனியே வருகிறதொன்று என்றபடி. ‘பனிவாடை’ என்றது- முன்பு குளிர்ச்சியாயிருந்த நிலைமையைப் பற்றி; இப்போது வெவ்வாடையாயிருக்குமே. அன்றியே, பனி - (ஸ்த்ரீகளை) நடுங்குவிக்கிற, வாடை என்று உரைத்தலுமாம். துழாகின்றது- உயிருள்ளவிடத்தை நாடி மர்ம ஸ்தாந்திலே கைவைத்துத் தேடித் தடவுகின்றதென்கை. ஓர் வாடை புகுந்து துழாகின்றது- நிலாத்தோற்றம், மாலைப்பொழுது, கடலொலி என்னுமிவையெல்லாம் ஒருங்கு சேர்ந்தும் செய்யமாட்டாத ஹிம்ஸையை இவ்வாடை போன்றே வந்து செய்கின்றதென்கை.
English Translation
The Plunderer evening has killed the valiant day, whose young wife west stands wailing with the milk-dribbling child Moon on her waist. His vassal the cool breeze goes on a rampage, taking all that is left of those who desire the Tulasi-garland of the Earth-measuring lord!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்