விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று* 
  அன்னன்ன சொல்லா பெடையொடும் போய்வரும்,*  நீலம் உண்ட-
  மின் அன்ன மேனிப் பெருமான் உலகில் பெண் தூது செல்லா*
  அன்னன்ன நீர்மைகொலோ,*  குடிச் சீர்மை இல் அன்னங்களே! 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இவள் - ‘இப்பராங்குச நாயகியானவள்
ஆள் அற்றம் பட்டு - (வேறு தனக்கு) ஆளில்லாமையால்
இன்னன்ன தூது - இப்படிப்பட்ட தூதராக
எம்மை - நம்மை
இரந்தாள் என்று - குறைகூறி வணக்கத்தோடு வேண்டிக் கொண்டாள்’ என்றெண்ணி

விளக்க உரை

நாயகியானவள் அனன்ப்பறவையை வெறுத்துரைக்கும் பாசுரம் இது. தான் தனது நாயகன் விஷயத்திலே தூது செல்லுமாறு அபேக்ஷிக்கச் செய்தேயும் அது செய்யாதே தன் பேடையோடு உல்லாஸமாக உலாவித் திரிகிற அன்னங்களைக் குறித்து வெறுத்துரைக்கின்றாள். இத்துறை திருக்கோவையாரில் ‘அன்ன மோடழிதல்’ எனப்படும். “உலகமெல்லாம் துயிலாநின்ற இந்நிலைமைக் கண்ணும் யான் துயிலாமைக்குக் காரணமாகிய என் வருந்தத்தைச் சென்று அவர்க்குச் சொல்லாது. தான் தன் சேவலைப் பொருந்திக் கவற்சியின்றித் துயிலாகின்றது என அன்னத்தோடு அழிந்து கூறாநிற்றல்” என்பது அவ்விடத்து உரை. ஸாக்ஷரத் புருஷோத்தமனாகிய ஸர்வேச்வரன் விஷயத்தில் அது செல்வதானது தாழ்ந்த இடத்துக்கு தூது செல்வதுபோல் இகழத்தக்கதன்றியே மிகக் கொண்டாடத் தக்கதென்பது போன்ற ‘இன்னன்ன தூது’ என்று சொல்லப்பட்டது. எம்பெருமானிடத்திலே ஸ்வயம் புருஷார்த்தமாகச் செல்ல விரும்ப வேண்டியது ப்ராப்தம். அஃது இல்லையாயினும் பிறர்க்குத் தூது செல்லும் வியாஜமாகவாவது போக நேர்ந்தால் பரமபாக்கியமென்று கொண்டு போகலாமே; விரைந்து தூது போவதற்கு உரிய சிறகமைதி முதலிய கருவிகளிற் குறையில்லாமை நோக்கியன்றோ அசக்தி கூறி மறுக்கும்படியான ஜந்துவையோ நான் பிரார்த்திப்பது, நவவியாகரண பண்டிதனான அனுமான் போல்வாரை விடுதற்கு ஏற்ற தூது நமக்குக் கிடைத்ததே! என்றும் இவை நினைக்கின்றன வில்லை; போகாமலும் வாராமலும் இங்கேயே தங்குகின்றனவா யிருந்தாலும் குற்றமில்லை; தம் காரியத்திற்காக இனத்தோடு உல்லாஸமாக அங்குமிங்கும் போய் வருகின்றன; அங்ஙனஞ்செல்லும்பொழுது எம் காரியத்தையுஞ் செய்யலாமே; அதுவுமில்லையே; ‘தன் பெண்மையும் பார்த்து,நாம் பறவை யென்பதும் நோக்காது நம்மைப் பிரார்த்திக்கின்றாளே, இவளுக்குச் சிறிது காரியஞ் செய்வோம்’ என்று இரங்குகின்றனவில்லை; வேறு ஆளைச் சுட்டிக்காட்டிவிட்டு விலகச் சந்தர்ப்பமில்லாதபடி ஆளற்றிருக்கும் நிலைமையையும் நோக்குகின்றனவில்லையே!- என வருந்துகின்றாள் பராங்குசநாயகி.

English Translation

Knowing that I spoke out thus and thus, only because I was alone without help. Well-bred swan-pairs would sift out the good from the bad and take my sweet words alone as message to my lord. O lit-bred swans! Have there ever been swans refusing to take maiden's messages in the blessed world of the cloud-and-lightning hued lord?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்