விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தண் அம் துழாய்*  வளை கொள்வது யாம் இழப்போம்,*  நடுவே-
  வண்ணம் துழாவி*  ஓர் வாடை உலாவும்,*  வள் வாய் அலகால்-
  புள் நந்து உழாமே பொரு நீர்த் திருவரங்கா! அருளாய்*  
  எண்ணம் துழாவுமிடத்து,*  உளவோ பண்டும் இன்னன்னவே? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வள்வாய் அலகால் - கூர்மையான வாயின் நுனியினால்
புள் - பறவைகள்
நந்து உழாமே - (தன்னிடத்துள்ள) சங்கைக்கோர்த்தாதபடி
பொரு - அலைமோதுகிற
வளை கொள்வது - (எமது) கைவளைகளைக் கொள்ளை கொள்ளாநின்றது

விளக்க உரை

கீழ்ப்பாசுரத்தில் தோற்றுவித்த ஸம்ச்லேஷம் கனவின் காட்சிபொன்றதாதலான க்ஷணிகமாயிற்று; பழைய விச்லேஷவ்யஸநமே தோன்றிற்று. ஆகவே, நாயகனைப் பிரிந்த நாயகி வாடைக்கு வருந்தியிரங்கும் பாசுரத்தாலே ஆழ்வார் தமது க்லேசத்தை வெளியிடுகிறார். ஆற்றாமை மிகுதியால் தலைவனை எதிரில் நிற்கிறாப்போலப் பாவித்து முன்னிலைப்படுத்திக் கூறியது இது. அன்றி, உருவெளிப்பாட்டில் கண்ட தலைவனை நோக்கியுரைதத்ததுமாம். உன்னோடு நேரில் ஸம்பந்தம் பெற்று திருத்துழாயானது விச்வேஷகாலத்தில் ஸம்ச்லேஷத்தை நினைப்பூட்டி மிகவும் வருத்தப்படுத்தி உடலிளைக்கச் செய்வதும் அதற்கு ஆற்றாது நாமெலிந்து வளையிழப்பதும் யுக்தமாயிருக்கலாம்; அதுவன்றி, “பீஷாஸ்மாத் வாத: பவதே” வாயுவானவன் எம்பெருமானிடத்து அஞ்சிக்கொண்டு (அவனது கட்டளைக்கு உட்படிந்து) வீசுகின்றான்” என்ற உபநிஷத்தின்படியே இயல்பில் உனக்கு அஞ்சி நடக்குந் தன்மையான காற்று உனது ஸம்பந்தம்பெற்ற நம்மை மையம் பார்த்து வருந்திக் கொள்ளை கொள்ளைத் தொடங்குவது தகுதியோ? காற்று உன்னை நலிய என்ன ப்ராப்தியுண்டு! அங்ஙனம் ஆகாதபடி எம்மைக் காத்திட வேண்டும்; உன் பக்கல் அன்பு வைத்தவர்களில் எம்மைப்போல் வருந்தியவரும் உன்னால் உபேக்ஷிக்கப்பட்டவரும் இதுவரையிலும் எங்கும் எவருமில்லையேயென்கிறாள். திருத்துழாயானது என்னை எவ்வளவு வேணுமானாலும் ‘துன்பப்படுத்தட்டும், அதற்று நான் உடம்பட்டிருக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றது அதில் நோக்குடையதல்ல; ‘காற்று என்னை ஹிம்ஸிப்பதாவது ஒருபடியாலும் யுக்தமன்று, என்று வற்புறுத்திக் கூறுவதில் நோக்குடைத்து. ஒருபுறத்தில் திருத்துழாய் நலியவும் மற்றொருபுறத்தில் வாடை வந்து வீசி கலியவும் இப்படி இரண்டு ஹிம்ஸநவஸ்துக்களுக்கு ஈடுகொடுக்க என்னாலாகவில்லையே! இந்த ஹிம்ஸைக்கு அவகாசமின்றநியே ஸம்ச்லேஷத்தைத் தந்தருளாய் என்றவாறு

English Translation

O Lord of Tiruvarangam where waves of the kaveri ensure that sharp-beaked birds do not peck into snails! While I lose my bangles for the Tulasi wreath, is it proper for a cool breeze to blow through me and drain my colour? Has it ever happeened like this before? Tell me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்