விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும்,*  ஒரோ குடங்கைக்-
    கயல் பாய்வன*  பெரு நீர்க் கண்கள் தம்மொடும்,*  குன்றம் ஒன்றால்-
    புயல்வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய்க்*
    கொயல்வாய் மலர்மேல்,*  மனத்தொடு என்னாம்கொல் எம் கோல் வளைக்கே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இயல்பு ஆயின - இயற்கையானதும்
வஞ்சம் - பிறரறியாதபடியுள்ளதுமான
நோய் - காதல் நோயை
கொண்டு - உடையவையாய்
உலாவும் - (ஆற்றாமை மிகுதியால் எங்கும்) பரந்து பார்க்கிற

விளக்க உரை

பிரிவாற்றாத தலைமகளின் ஈடுபாட்டைக் கண்ட செவிலித்தாய் இரங்கிக் கூறுதல் இது. எனது மகள் கண்கலக்க முற்றாள்; நெஞ்சும் அழியப்பெற்றாள்; இவ்வளவுக்கு மேலும் இனி ஏதாய் முடியுமோ வென அஞ்சியுரைக்கின்றாள். இம்மகளது கண்களோ வென்னில், ஸ்வாபாவிகமாயும் பிறர் தெரிந்து கொள்ள வொண்ணாதபடி யிருப்பதாயுமுள்ள காதல்நோயை யுடையவையாய் ஆற்றாமை மிகுதியால் எங்கும் பரந்து பார்க்கின்றவையாய் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அகங்கையளவாக உள்ளவையாய், கயல்மீன்போலப் பிறழ்வனவாய் மிக்க நீர்ப்பெருக்கையுடையனவாயிருக்கின்றன; இவளது மனமோவென்னில், *குன்றமேந்திக் குளிர் மழைகாத்தவனும் கருடவாஹநனுமான கண்ணபிரானது தேன்பெருகுந் திருத்துழாய் மலரின் மேல் ஆசைப்பட்டுச் சென்றது; இனிமேலும் என்ன நிலைமை நேரும்? என்று கவல்கின்றாளாயிற்று. ‘இயல்வாயின வஞ்ச நோய் கொண்டுலாவு மெங்கோல் வளைக்கு’ என்று அந்வயித்தலுமாம். உடம்பு மெலிதலால் கைவளை கழலும்படியான நிலைமை நேருமோவென்று வளைக்குக் கவலைப்பட்டமை தோன்ற ‘கோல்வளைக்கு’ எனப்பட்டது. அழகிய வளையல்களையுடைய இவளுக்கு என்றபடி. ‘கோலம்’ என்ற சொல் ‘கோல்’ என விகாரப்பட்டது; ‘நீள்’ என்பதுபோல.

English Translation

My bangled daughter has fallen prey to a deadly disease. She doles out fears by the handful, from fish-like eyes that would fill her palms. Alas! What is going to happen to her, and to her heart which craves for the nectar-laden flowers of the Tulasi wreath worn by the bird-rider Lord who protected his cows against a rain with a mount?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்