- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கொல்லையைக் காத்துக்கொண்டிருக்கும் நாயகியையும் தோழியையுங் கண்டு நாயகன் தான் குறை வேண்டுதலைக் கூறிய துறை இது. தன் மனம் இவர்களுக்கு வசப்பட்டதைக் கூறின் குறிப்பால், தன் கருத்தைப் புலப்படுத்துகின்றவாறு, நீங்கள் புனத்தைவிட்டு நீங்காததுபோல என் மனத்தைவிட்டு நீங்குகிறீரில்லை யென்றும், புனம்போலே என் மனமும் உங்கள் பாதுகாப்புக்கு உட்பட்டுக் கிடக்கிறதென்றும் கருத்துத்தோன்ற ‘பெண்காள்! உங்களைப் பெரியோர் இங்கே வைத்தது புனத்தைக் காக்கவோ? அன்றி என் மனத்தையும் காக்கவோ? புனக்காவலோடு நில்லாமல் என் மனக்காவலிலும் வியாபரிப்பது உங்கட்குத் தகுதியன்று என்கிறான். அவர்களழகைத் தான் காணும் பொருட்டும் தன் முகத்தை அவர்கள் பார்க்கும் பொருட்டும் இவர்களுள்ள விடத்தின் ஸமீபத்தின் இவன்றான் தடுமாறித் திரிந்தமை தோன்றப் ‘புனந்தயலே வழிபோகு மருவினையேன்’ என்கிறான் அருவினையேன்= அகப்பட்டால் தப்பமாட்டாது வருந்துதற்குக் காரமான முற்பிறப்புத் தீவினையையுடையேன் என்றவாறு, மகளிர் = பெண்களுக்கு உரிய எல்லா நல்லிலக்கணமும் அமைந்தவர்கள்; அண்மைவிளி, ‘புனமோ’ ‘மனமோ’ என்றவிடங்களில் ஓகாரங்கள்- வினா.
English Translation
Ladies! Are you in charge of these groves? Or this hapless wayfarer-self's heart? You are like a horde of celestials in the sky-world of Krishna, the lord with eyes that liken a thicket of bright lotuses. Tell me, Is this right on your part?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்