விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காரிகையார் நிறை காப்பவர் யார் என்று*  கார் கொண்டு இன்னே-
  மாரி கை ஏறி*  அறையிடும் காலத்தும்,*  வாழியரோ- 
  சாரிகைப் புள்ளர் அம் தண்ணம் துழாய் இறை கூய் அருளார்* 
  சேரி கை ஏறும்,*  பழியாய் விளைந்தது என் சில்மொழிக்கே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

காரிகையார் நிறைகாப்பவர் யார் என்று - ‘ஸ்திரீகளுள் (எம்முன், அடக்கத்தை அழியாமற் பாதுகாத்துக்கொள்ள வல்லவர் யாவருள்ளார்?” என்று கருதிச்செருக்கி
மாரி - மேகங்கள்
கார் கொண்டு - கருமை நிறங்கொண்டு
இன்னே - இவ்வாறு
கை ஏறி - ஒழுங்காக (வானத்தின் மீது) ஏறி நின்று

விளக்க உரை

செவிலித்தாய் பழிக்கு இரங்கல் என்பது துறை. இன்ன காலத்திலே வருகிறேனென்று சொல்லிப் பிரிந்துபோன நாயகன் வாக்குத் தவறினதற்கு ஆற்றாத தலைவிக்கு நிகழும் பழிக்குச் செவிலித்தாய் இரங்குகின்றாளென்க. அழகிய மணவாளச் சீயருரையில் ‘பாங்கி பழிக்கிரங்கின பாசுரம்’ என்று இது தோழி பேச்சாகக் கொள்ளப்பட்டிருந்தாலும், நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை முதலானாருடைய வியாக்கியானங்களில் தாய் பாசுரமாகக் கொள்ளப்பட்டிருத்தலாலும், என் சின்மொழிக்கு’ என்று தனது உடைமையாதல் தோன்றக் கூறியுள்ள ஔசித்யத்தினாலும் இப்பாட்டைத் தாய்வார்த்தை யென்றே கொள்ளுதல் பொருந்தும். பெரும்பாலும் தாய் வார்த்தை ‘என் மகள்’ என்ற வாய்ப்பாடு தோன்றவும் தோழிவார்த்தை அவ்வாய்ப்பாடு தோன்றாமலும் வரும். இது இவ்விருவர் வார்த்தைக்கும் எளிதில் வேறு பாடறியத்தக்க நுட்பங்களுள் ஒன்றாம்.

English Translation

See how the dark clouds gather and roar throwing a challenge, "Ladies! Who among you can keep you grce now?". Atleast now, should not the circling bird-rider call us and give a bit of his Tulasi garland? Alas, this has led to my laconic daughter becoming the target of the town's abuse, Long live the world!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்