விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கடல் கொண்டு எழுந்தது வானம்*  அவ் வானத்தை அன்றிச் சென்று*
  கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது*  கண்ணன் மண்ணும் விண்ணும்-
  கடல் கொண்டு எழுந்த அக் காலம் கொலோ!  புயல் காலம்கொலோ!*
  கடல் கொண்ட கண்ணீர்,*  அருவிசெய்யாநிற்கும் காரிகையே.
   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கடல்கொண்ட - கடலளவினதான
கண்நீர் அருவி - கண்ணீர் வெள்ளத்தை
செய்யா நிற்கும் - செரிந்து நிற்கிற
காரிகையே - அழகிய நங்காய்!
வானம் - ஆகாயமானது

விளக்க உரை

இப்பாட்டின் துறைவகையில் பூருவர்களுள் அபிப்ராய பேதமுண்டு; கீழ் ஏழாம்பாட்டைப் போல இதனையும் காலமயக்குத் துறை யென்னலாமென்பது நம்பிள்ளை பெரிய வாச்சாள் பின்னைகளின் திருவுள்ளம். கார்காலங் கண்டழிந்த தலைவியின் ஆற்றாமைகண்டு தோழி இரங்கல் என்பது வரதிகேஸரி அழகிய மணவாளச்சீயரது கொள்கை. அதாவது- கார் காலத்திலே மீண்டு வருவேனென்று காலங்குறித்துப் பிரிந்துசென்ற நாயகன் - அக்காலம் வந்தும் தான் வாராததால் நாயகியானவள் காலத்தை நோக்கி ஆற்றாதுவருந்த, தோழி அது கண்டு இரங்கிக் கூறியது என்பதாம். “கலந்து பிரிந்த தலைமகன் கார்காலத்தைக் குறித்துப் போனானாய் அக்காலமும் வந்து இவன் வாராதொழிய, அத்தாலே ஆற்றாமை மீ தூர்ந்து நோவுபடுகிற பிராட்டியைக் கண்ட தோழியானவள் அவன் வருமளவும் இவளை ஜீவிப்பிக்கைக்காக காலத்தை மயக்கி ஆச்வஸிப்பிக்கிறாளாயிருக்கிறது” என்பது நம்பிள்ளை யீடு. அழகிய மணவாளச் சீயருரையில் இது கால மயக்கமன்று’ என்று மறுத்துக் கூறப்பட்டிருப்பினும் அது ஸ்வதந்தரப்படி யென்று மறுக்கத்தக்கது. காலமயக்கத் துறையென்றே கொள்வது பொருந்தும். இதில் ‘புயற்காலங்கெள்ள வேணுமென்பது சீயர் கருத்து; கீழே காலமயக்காக வந்த ஏழாம் பாட்டிலும் “திருமால்கோலஞ் சுமந்து பிரித்தார் கொடுமை குழறு தண் பூங்காலங்கொலோ வறியேன்” என்றிருக்கின்றது; இங்கும் அங்ஙனேயிருப்பது அநுசிதமன்று.

English Translation

O Beautiful Girl! The clouds rose from the ocean laden with water. The ocean pursued the clouds and retrieved its water, causing floods like the deluge, as when krishna swallowed the Earth and sky. Can this be any time for another deluge? Can this be the time for the monsoon rains? Alas, these are your tears, welling like the ocean!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்