விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அரியன யாம் இன்று காண்கின்றன,*  கண்ணன் விண் அனையாய்!- 
  பெரியன காதம்*  பொருட்கோ பிரிவு என,*  ஞாலம் எய்தற்கு-
  உரியன ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி ஓரோ குடங்கைப்*
  பெரியன கெண்டைக் குலம்,*  இவையோ வந்து பேர்கின்றவே? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அரியன - (உலகத்தில் வேறு எங்கும் பார்ப்பதற்கு) அருமையானவை;
கண்ணன் விண் அணையாய் - எம்பெருமானுடைய பரமபதம்போல அளவற்ற இன்பம் தருபவளே!
பெரியன காதம் பிரிவு - அதிக தூரங்களான பலகாங்களில் (அவரவர்கள்) பிரிந்து போவதானது
பொருட்கோ - பொருள் சம்பாதிப்பதற்காகவோ?’
என - என்று யான் (பொதுப்படையாக உலக நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்க

விளக்க உரை

காதலன் நம்மைப் பிரிந்துபோகப் போகிறானென்றுணர்ந்த காதலி அப்பிரிவுக்கு ஆற்றாது வேறுபாடடைய, அதனைக்கண்ட காதலன் உரைக்கும் பாரசுமிது. கிழ் எட்டாம்பாட்டில், நாயகன் பொருள் சம்பாதிப்பதற்காகத் தேசாந்தரம் செல்ல நினைத்திருந்தபடியை நாயகியானவள் குறிப்பாலறிந்து கூறியிருக்கிறாள். அது நிற்க, பொருள்படைப்பதற்காக நாயகியைப் பிரிந்து போகவேணுமென்றெண்ணிய நாயகன், அவளோடு சொல்லாமல் சடக்கெனப் பிரிந்தாலும், அல்லது, ‘தேசாந்தரம் போகப்போகிறேன்’ என்று சடக்கென பிரிவைத் தெரிவிததாலும் அவள் மரணபர்யந்தமான கஷ்டததை யடைந்திடுவளெனக்கருதி, அவள் ஆற்றுமாறு கொஞ்சங் கொஞ்சமாகப் பிரிவைத் தெரிவிக்கத் தொடங்கி, லோகாபிராமமாகப் பல பிரஸ்தாவங்கள் பண்ணுமடைவிலே ‘உலகத்திலே பொருள் சம்பாதிப்பதற்காகப் பிரிந்து தேசாந்தரம்போகிறதென்கிற ஒரு விஷயம் உண்டு’ எனப் பொதுப்படையான ஒரு ப்ரஸ்தாவம் எடுத்துக்கூற, அவள் அது கேட்டவுடன், ‘இப்போது இவர் இவ்விஷயம் பிரஸ்தாவித்தது வெறுமனல்ல; இது லோகாபிராம வார்த்தைகளிற் சேர்ந்தவல்ல; நம்மைப் பிரிந்து போவதற்காகவே இது அவதாரிகையாகக் கூறின கூற்றாயிருக்க வேண்டும்’ என நினைத்து, பிரிவு உண்டாய்விட்டதாகவே கண்ணுங் கண்ணீருமாயிருக்க, அதைக் கண்ட நாயகன், நாம் பிரிந்துபோவதாகச் சொல்லாதிருக்கவும் வெறும் வார்த்தையிலே நமது உட்கருத்தைத் தெரிந்துகொண்ட இவளுடைய நிலைமை இப்படியாயிற்றே! என்று ஆச்சரியப்பட்டுத் தோழியை நோக்கிக் கூறியது என்றாவது நெஞ்சை நோக்கிக் கூறியது என்றாவது கொள்க.

English Translation

We only said, "Will he ever leave your side and go to earn wealth?", Alas, this girl with eyes that could buy the Earth, -her eyes darting in and out like kendal fish as big as her palms, - Sheds pearly tears and pales into a golden hue. Alas, it is hard to see this girl with Krishna's heavenly beauty sufferhus.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்