- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தலைவன் பொருள்வயிற் பிரிதலைக் குறிப்பாலறிந்து தலைவி தோழிக்குக் கூறல் இது. தேசாந்தரஞ் சென்று பொருள் சம்பாதிப்பதற்காக நாயகியைப் பிரிந்து செல்லுதல் பொருள்வயிற் பிரிவாம். (பொருள்வயின் - பொருள் நிமித்தமான என்றபடி.) இங்கே ஒரு சங்கை பிறப்பதுண்டு; - எல்லாவற்றாலும் பரி பூரணனான ஒரு உத்தம புருஷனையே தலைவனாக நாட்டி நூலுரைப்பர் கவிகள்; அத்தலைவன் பொருள் சம்பாதிக்கும் பொருட்டு நாயகியைப் பிரிந்து தேசாந்தரம் செல்லப் பார்க்கிறானெனில், அவன் ஏழை என்று ஏற்படுமே; அவனவன் தலைவனாயிருக்கத்தக்கதே என்று சங்கிக்க இடமுண்டு. இதற்கு கேண்மின்; பொருளில்லாதவனாய்ப் பொருளீட்டுதற்காகப் பிரிகிறானென்பதில்லை; அப்பொருள் கொண்டு, துய்ப்பது ஆண்மைத் தன்மையன்று என்று கருதித் தனது ஸ்வயார்ஜிதமாய்ப் படைத்த பொருள் கொண்டு வழங்கி வாழ்வதற்குப் பிரியும் பிரிவு இது- என்றுணர்க. தேவகாரியமும் பித்ருகாரியமும் ஸ்வயார்ஜிகமான பொருள்கொண்டு செய்தாலன்றிப் பயன்படா; தாயப் பொருளாற் செய்யுமது தேவர்களையும் பித்ருக்களையும் இன்புறுத்தாதாம். ஆதலால் அவர்களையும் இன்புறுத்த வேண்டிப் பிரிவது ஏழைமையைக் காட்டாதென்க.
English Translation
Judging from what we see and what we hear of the things the bee-humming mountain-lord does these days, it is clear that the mountain-lifter Krishna has resolved to retreat into the tall gods-worshipped hills of Venkatam for making wealth.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்