விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இனி அறிந்தேன்*  ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்* 
  இனி அறிந்தேன்*  எம்பெருமான் உன்னை*  இனி அறிந்தேன்*
  காரணன்நீ கற்றவைநீ*  கற்பவைநீ*  நல்கிரிசை
  நாரணன்நீ*  நன்கு அறிந்தேன் நான்.  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

காரணன் நீ - ஸகலஜகத்துக்கும் காரணபூதன் நீ
கற்றவை நீ - இதற்கு முன்பு அறியப்பட்ட பொருள்களெல்லாம் நீ
கற்பவை நீ - இனிமேலறியப்படும் பொருள்களும் நீ (என்கிற இதனையும்)
நல் கிரிசை - நிர்ஹேதுகரக்ஷண மாகிற நல்ல வ்யாபாரத்தை யுடையனான
நாரணன் நீ - நாராயணன் நீ

விளக்க உரை

மஹோபநிஷத்தில் ஓதினகட்டளையிலே, பிரமன் சிவன் முதலான ஸகலப்ரபஞ்சங்கடுகும் காரணனான நாராயணனே பரதெய்வமென்று இப்பரபந்தத்தின் முதற்பாட்டில் பிரதிஜ்ஞை பண்ணி, சருதிஸ்மருதி இதிஹாஸம் முதலியவற்றாலும் தக்க நியாயங்களாலும் ச்ரியபதித்வம் முதலிய சின்னங்களாலும் அதை நெடுக உபபாதித்துக் கொண்டுவந்து, அடியில் பண்ணின பிரதிஜ்ஞைக்குத் தகுதியாக ஸ்ரீமந்நாராயண பரத்வத்தை நாட்டித்தலைக்கட்டுகிறார். ஆகவே, தேவதாந்தரங்களினிடத்து உண்டாகக்கூடிய பரத்வப்ரமத்தைத் தவிர்த்து ஸ்ரீமந்நாராயண னிடத்திலேயே பரத்வத்தை ஸ்தாபிப்பதே இப்பிரபந்தத்தின் முழுநோக்கு என்று அறியப்பட்டதாகும்.

English Translation

O Lord! Now I know. You are the lord of Siva and Brahma. You are the cause. All that is known is you. All that remains to be known is you. You are Narayana, the benevolent. I have understood this well.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்