விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தமர்ஆவார் யாவர்க்கும்*  தாமரை மேலாற்கும்* 
  அமரர்க்கும் ஆடுஅரவுஆர்த் தாற்கும்*  அமரர்கள்
  தாள் தாமரை*  மலர்கள் இட்டு இறைஞ்சி*  மால்வண்ணன் 
  தாள் தாமரை அடைவோம் என்று*.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

 
மால் வண்ணன் - கரியமேனியனான எம்பெருமானுடைய
தாள் தாமரை - திருவடித் தாமரைகளில்
மலர்கள் இட்டு - புஷ்பங்களை ஸமர்ப்பித்து
இறைஞ்சி - வணங்கி
தாள் தாமரை அடைவோம் என்று - அத்திருவடித்தாமரைகளை யடைவோமென்று

விளக்க உரை

எம்பெருமான் திருவடிகளே உபாயோபேயங்களென்று உறுதிகொண்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் உபயவிபூதியிலுள்ளார்க்கும் நிர்வாஹகராம் படியான பெருமையை யுடையவர்களென்கிறார். ‘ஆடரவத்தாற்கும்‘ என்றும் ஓதுவர். சிவபெருமான் அரவம் பூண்ட வரலாறு, ஒரு காலத்தில் சிவபிரான் தன்னை மதியாத தாருகவனத்து முனிவர்களுடைய கருவத்தைப் பங்கஞ்செய்யவும் அவர்களின் மனைவிமார்களது கற்புநிலையைப் பரிசோதிக்கவுங் கருதித் தான் ஒரு காமுகபுருஷவடிவங் கொண்டு அவரில்லந்தோறுஞ் சென்று பிக்ஷாடனஞ் செய்து தன்னை நோக்கிக் காதல் கொண்ட அம்முநிபத்நிகளின் கற்புநிலையைக் கெடச் செய்ய, அதுகண்டு கோபம்மூண்ட அம்முனிவர்கள் அபிசாரயமாக மொன்று செய்து அவ்வோம்த் தீயினின்று எழுந்த நாகங்கள் பூதங்கள் மான் புலி முயல்கள் வெண்டலை முதலியவற்றைச் சிவனைக் கொன்று வரும்படியேவ, சிவபெருமான் தன்மேற் பொங்கிவந்த நாகங்களை ஆபரணங்களாகவும் பூதங்களைத் தனது கணங்களாகவுங் கொண்டு மானைக் கையிலேந்திப் புலியைத் தோலையுரித்து உடுத்து முயலகைன முதுகிற் காலால் ஊன்றி வெண்டலையைக் கையாற்பற்றிச் சிரமேலணிந்து இங்ஙனமே அவற்றையெல்லாம் பயனிலவாகச் செய்துவிட்டன்னென்பதாம்.

English Translation

Those who desire to attain the dark hued Lord become his devotees, offering fresh flowers of his adorable lotus feet, Such souls become gods even to the gods, including Brahma and Siva.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்