விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வீற்றிருந்து*  விண்ஆள வேண்டுவார்*  வேங்கடத்தான் 
  பால்திருந்த*  வைத்தாரே பல்மலர்கள்*  மேல்திருந்தி
  வாழ்வார்*  வரும்மதி பார்த்து அன்பினராய்*  மற்றுஅவற்கே 
  தாழ்வாய் இருப்பார் தமர்* 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வீற்றிருந்து - பெருமை பொலிய இருந்து
ஆள வேண்டுவார் - ஆட்சிசெய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள்
வேங்கடத்தான் பால் - திருவேங்கட முடையான் பக்கலில்
பல் மலர்கள் - பலவகைப்பட்ட மலர்களை
திருந்த - நன்றாக

விளக்க உரை

பாகவதராலே அங்கீகரிக்கப் பெறுமவர்கள் எல்லாரிலும் மேற்பட்டவர்களென்கிறார். எம்பெருமான் திருவடிகளில் மலர்களைத் தூவி அடிமை செய்தவர்களே விண்ணாள்பவர், ஆயினும், எம்பெருமானுக்கு அடிமையாயிருக்கின்ற பாகவதர்களால் ‘இவர்கள் நம்முடையவர்கள்‘ என்று அங்கீகரிக்கப்படுமவர்கள் முன்னடிகளிற் சொல்லப்பட்ட அதிகாரிகளிற் காட்டிலும் சிறந்து வாழ்வர் என்றாராயிற்று. இரண்டாமடியின் முதலிலும் முடிவிலும் ‘திருந்த‘ என்னாதே ‘திருந்து‘ என்றே ஓதிவருமவர்களின் பாடம் மறுக்கத்தக்கது. வரும் மதிபார்த்து அன்பினராய் – எம்பெருமானுடைய திருவுள்ளக்கருத்தைப் பின் சென்று அன்பு கொண்டிருப்பவர்களென்கை.

English Translation

Those who wall to rule Vaikunta worship constantly the Venkatam lord offering flowers with clear mind, and cultivate love for all, humbling themselves before his devotees, who thus get the exalted life themselves.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்