விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தொழில் எனக்குத்*  தொல்லை மால்தன் நாமம் ஏத்த* 
  பொழுது எனக்கு மற்றுஅதுவே போதும்*  கழிசினத்த
  வல்லாளன்*  வானரக்கோன் வாலி மதன் அழித்த* 
  வில்லாளன் நெஞ்சத்து உளன்.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கழி சினத்த - மிகக்கோபத்தை யுடையவனும்
வல்லாளன் - மிக்க வலிமையுடையவனும்
வானார் கோன் - குரங்குகட்கு அரசனுமாகிய
வாலி - வாலியினுடைய
மதன் - மதத்தை (கொழுப்பை
அழித்த - தொலைத்த
 

விளக்க உரை

இராமபிரான் வாலியைக் கொன்றவிதனில் ஸாமாந்யர் சில ஆக்ஷேபங்கள் கூறுவதுண்டு, அவையும் அவற்றுக்கு ஸமாதானங்களும் வருமாறு. – ‘இராவணவதத்திற்கு உதவி தேடுகிற இராமன் இராவணை எளிதில் வெல்லவல்ல வாலியைக் கொன்றுவிட்டு, பயங்கொள்ளியான ஸுக்ரீவனை உதவிசெய்து கொண்டது என்ன புத்திசாலித்தனம்!‘ என்பர் சிலர், கேண்மின் – வலிமுன்னமே இராவணனுடன் அக்நிஸாக்ஷிகமாக ஸ்நேஹங் கொண்டிருந்தமைபற்றி அவனைத்தான் உதவிகொண்டால் இராவணன் முதலிய துஷ்டர்களைத் தொலைக்க வகையில்லாமையால் இராமன் ஸுக்ரீவனை நண்பனாகக் கொண்டு அவன் வேண்டுகோளின்படி வாலியை வதைத்திட்டனன். இனிச் செய்ய வேண்டிய ராவண ஸம்ஹாரமாகிற தேவகாரியத்திற்கு இவ்வாலி வதம் அங்கமெனக் கருதத்தக்கது, எவ்வகைப் பெருந்தீங்கு செய்திருந்தாலும் சரணமடைந்தால் அவர்களைப் பாதுகாப்பதென்ற சிறந்த தருமத்தை மேற்கொண்டு நடப்பவனான இராமபிரான், அத்தருமத்தை முழுதும் விட்டவனும் ஸுக்ரீவன் சரணமடைந்த பின்னரும் அவனை மிக வருந்திக் கொல்லத் தொடங்கி அந்தத் தருமத்திற்கு எதிரானவனுமான வாலியைக் கொன்றது பொருந்தும். அன்றியும், பிறர் மனைவியைக் காதலித்துக் கவர்தலும், தம்பியிடம் பகை பாராட்டுதலும், வலியழிந்து முதுகுகாட்டி ஓடுகின்றவனைத் துரத்தி துரத்திக் கொல்லத் தொடங்குதலும் முதலிய தீச்செயல்கள் வாலியினிடம் இருந்ததனாலும் பரமதார்மிகனான இராமன் வாலியை அழிக்கலானான். இராமபிரான் தான் ஏகபத்நீ விரதமுடையனாய், தம்பியரைத் தன்னுயிர்போலக் கொள்பவனாய், வலியிழந்த பகைவனை ‘இன்றுபோய் நாளைவா‘ என்று அன்போடு சொல்லி விடுத்தருளும் மஹாவீரனாவான். இஃதெல்லாமிருக்கட்டும், மறைந்து நின்று அம்பு எய்தது கூடுமோ? எனின், இது அரசர் கொடிய விலங்குகளைப் பதுங்கி நின்று அழிக்கும் வேட்டைமுறையா லென்பர். “***“ என்று அதிமாநுஷஸ்வத்தில் ஆழ்வானருளிச் செய்ததுங்காண்க. வேறுவகையான ஸமாதானங்களும் உள்ளன. முதலில் சரணமடைந்த ஸுக்ரீவனுக்கு அபயமளித்து வாலியைக் கொல்வதாக வாக்குதத்தஞ் செய்துவிட்ட பெருமாள் பின்னர் வாலியினெதிரில் நின்று போர்செய்தால் இப்பெருமானது திறத்தைக் கண்டு அஞ்சி வாலியும் இவனைச் சரணமடைந்திருவனாயின் தஞ்சமடைந்தவனைக் கொலை செய்யக்கூடாமை பற்றி அவனைக் கொல்லாதுவிட நேர்ந்தால் முன்னைய வாக்கு (ஸுக்ரீவனுக்கு அளித்த வாக்கு)த் தவறி விடுமேயென்ற நோக்கம் முக்கிய காரணமாம். அன்றியும், எதிர்ந்தார் வலிமையிற் பாதி தன்னிடம் வந்து கூடும்படி வாலி சிவபிரானிடத்துப் பெற்றிருக்கின்ற வரம் பழுதுபடாமலிக்குமாறு மறைந்து நின்று அம்பெய்தனன் என்றலு மொன்று. அவரவர்கள் தேவதாந்தரங்களிடத்துப் பெற்றவரங்கள் பழுதுபடாதபடியன்றோ எம்பெருமான் காரியஞ்செய்வது. இங்ஙனம் பல காரணங்களுள. இங்கு விரிப்பிற் பெருகும். ஸ்ரீராமாயணம் அதன் வியாக்கியானங்கள் வல்லார்வாய்க் கேட்டுணர்க. கடவுளரது நியாயம் நுட்பமனாதும் அறிதற்கு அரியதுமாதலால் அது மனிதரது நியாயத்தோடு ஒப்பு நோக்கி ஆராய்தற்கு உரியதன்றென்பது உணரத்தக்கது நிற்க.

English Translation

The bow-wielder Lord who pierced an arrow into the mighty angry Vall's chest is forever in my heart, Praising the ancient Lord is my vacation, it is also a Good avocation for me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்