விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிதிரும் மனம் இலேன்*  பிஞ்ஞகன் தன்னோடு,* 
    எதிர்வன்; அவன் எனக்கு நேரான்*  அதிரும்
    கழற்கால மன்னனையே*  கண்ணனையே*  நாளும் 
    தொழக் காதல் பூண்டேன் தொழில். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாளும் - எந்நாளும்
தொழ - தொழும்படியாக
காதல் - ஆசைப்படுவதையே
தொழில் - நித்ய கருமமாக
பூண்டேன் - ஏற்றுக்கொண்டிருக்கிற நான்

விளக்க உரை

கண்ணபிரான் திருவடிகளை யாச்ரயித்து அநுபவிப்பதையே நித்யா நுஷ்டாநமாகக் கொண்டிருக்கிற எனக்கு ஜ்ஞாநாதிகனாக ப்ரஸித்தனாயருக்கிற ருத்ரனும் ஒப்பாக மாட்டானென்கிறார். தமக்கு ருத்ரன் ஒப்பாவதற்கு ப்ரஸக்தியிருந்தலன்றோ ‘அவன் எனக்கு நேரான்‘ என்னலாம், அப்ரஸக்த ப்ரதிஷேதம் பண்ணவொண்ணாதே என்று சிலர் சங்கிப்பார்கள், சாஸ்த்ரங்களில் “***“ (சிவனிடத்திலிருந்து அறிவைப் பெற்றுக் கொள்க) என்று விதித்திருக்கையாலே உலகுக்கெல்லாம் உணர்வையிளக்கவல்லனாம்படி மஹாஜ்ஞாநியாக ருத்ரன் ப்ரஸித்தி பெற்றிருப்பதனால் அங்ஙனே மஹாஜ்ஞாதாவான ஆழ்வாரோடு அவனுக்கு ஒப்புச் சொல்ல ப்ரஸக்தியுண்டு, ப்ரஸக்தமான அது கழிகப்படுகிறது. இரண்டாமடிமுதலாக. ருத்ரன் ஸ்தவகுணம் தலையெடுத்தபோது ‘எம்பெருமானே ரக்ஷகன்‘ என்றிருப்பதும், ரஜஸ்தமோகுணங்க்ள தலையெடுத்தபோது ‘நானே ஈச்வரன்‘ என்று மார்பு நெறித்திருப்பதுமா யிருக்கையாலே, ஸர்வகாலத்திலும் பகவத் ப்ராவண்யமே யாத்ரையாயிருக்கு மிவர்க்கு ஒப்பாகமாட்டானென்க.

English Translation

My hean is not tickle; I shall appose Siva, he is no match tome. My heart's love is given solely to worshipping everyday the feet of my king and Lord Sri Krishna, who wears resounding Victory anklets.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்