விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கதவு மனம் என்றும்*  காணலாம் என்றும்* 
  குதையும் வினைஆவி தீர்ந்தேன்*  விதைஆக
  நல்தமிழை வித்தி*  என் உள்ளத்தை நீவிளைத்தாய்* 
  கற்றமொழி ஆகிக் கலந்து.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நல் தமிழை - சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய இப்பிரபந்தத்தை
விதை ஆக வித்தி - (பக்தியாகிற பயிர்க்கு) விதையாக விதைத்து
என் உள்ளத்தை - எனது ஹ்ருதயத்தை
விளைத்தாய் - விளையும்படி க்ருஷி பண்ணினாய்
மனம் - மனமானது

விளக்க உரை

மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ“ என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது – ஸம்ஸார பந்தங்களைப் பூண்கட்டிக் கொண்டு எம்பெருமானை மறந்தொழிவதற்கும் மனமே காரணம், வீண்பாசங்களை விட்டொழிந்து அப்பெருமானைக் கண்டுகளிக்கப் பெறுதற்கும் மனமே காரணம் என்கை. இவ்விரண்டு வகையான ஸங்கதியும் ஸம்ஸாரிகளின் அநுபவத்தில் மாறி மாறி வந்துகொண்டேயிருக்கும், ஊழ்வினையின் கனத்தால் விஷய ப்ராவண்யம் மேலிடுகிற காலங்களில் மனமானது ஸம்ஸாரபந்தத்திற்குக் காரணம் என்று அறுதியிடப்பெறும், பகவத் பாகவத கடாக்ஷலேசத்தால் பகவத் விஷயத்தில் பற்று உண்டாகுங் காலங்களில் மனமானது மோக்ஷத்திற்குக் காரணம் என்று அறுதியிடப் பெறும். ஆகவே, இவ்விபூதியிலுள்ள நம்போல்வார்க்கு விஷயாந்தரப் பற்றும் நிலைத்திராது, பகவத் விஷயப் பற்றும் நிலைத்திராது, இரண்டும் மாறிமாறி வந்துகொண்டே யிருக்குமாதலால் ஒரு மையத்தில் ‘மனம் பந்தஹேது‘ என்கிற உணர்ச்சியும் பின்னுமோர் ஸமயத்தில் ‘மனம் மோக்ஷஹேது‘ என்கிற உணர்ச்சியுமாயிருக்கும். நம்மைப் போலன்றிக்கே ஆழ்வார் எப்போதும் எம்பெருமானையே அநுபவிக்கும்படியான உறைப்புப் பெற்றவராதலால் ‘மனம் பந்தஹேதுவோ மோக்ஷஹேதுவோ‘ என்கிற குழப்பம் இவர்க்கு நேர ப்ரஸக்தியில்லை, ‘மனம் மோக்ஷஹேதுதான்‘ என்கிற நிச்சய வுணர்ச்சியே இவர்க்குள்ளது, இதைத்தான் இப்பாட்டில் அருளிச் செய்கிறார். கதவுமனமென்றும் காணலாமென்றும் குதையும் வினையாவி தீர்ந்தேன் –ஒரு வாசலுக்குக் கதவு இருட்டிருந்தால் உள்ளே புகுவதற்கு அது தடையாயிருக்குமாதலாலே கதவு என்கிற சொல் பிரதிபந்தகத்தைச் சொல்லுகிறது இங்கு, மனம் (பகவத் ப்ராப்திக்குப்) பிரதிப்பந்தகமோ அல்லது (பகவானைக்) காண்கைக்கு உறுப்போ என்று அலைபாய்வது தவிர்ந்தேன் என்றவாறு. அவர்ந்தமைக்குக் காரணங் கூறுவன பின்னடிகள். நெஞ்சினால் நினைக்கவும் முடியாத ஜ்ஞாநகக்திகளையுடையனான நீ என்னுடைய வாக்கில் வரும் சொற்களுக்குப் பொருளாயிருந்து கொண்டு என்னுடைய நெஞ்சமாகிற நிலத்திலே தமிழாகிற விதையை விதைத்துப் பக்தியாகிற பயிர் செழித்து விளையும்படி செய்தாயாகையாலே நிலை நின்ற நெஞ்சுடையேனாயினேன் என்றாராயிற்று.

English Translation

O Lord! My heart was a follow land. You sowed the seeds of good Tamil and cultivated it, bringing forth a rich harvest of knowledge, No more shall my heart Vacillate between bondage and freedom.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்